Breaking News LIVE: நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்று சென்னை அண்ணா மேம்பாலம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
Breaking News LIVE: நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.
LIVE
Background
சென்னையில் 25வது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்ர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அதேபோல், டீசல் விலை லிட்டருக்கு மாற்றமின்றி 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை- மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் - முதல்வர் ஸ்டாலின்..!
சென்னை மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்று சென்னை அண்ணா மேம்பாலம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சியில் முக்கியப்பங்கு நெடுஞ்சாலைத்துறைக்கு உண்டு என்றும் முதல்வர் ஸ்டாலின்.
நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்று சென்னை அண்ணா மேம்பாலம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
மக்கள் பயன்பாட்டில் மிகவும் முக்கியமானது நெடுஞ்சாலைத்துறை.
கல்லூரி துணை முதல்வருக்கு மதுரை டீன் பொறுப்பு !
சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையால் டீன் பொறுப்பில் இருந்த ரத்தினவேல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் அவருக்கு பதிலாக மதுரை மருத்துவ கல்லூரி டீன் பொறுப்பை துணை முதல்வர் தனலட்சுமி கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தை தத்தெடுத்தார் கனிமொழி!
தூத்துக்குடி மாவட்டம் சிவகளை கிராமத்தை தத்தெடுத்தார் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்
அடுத்த 2 நாட்களுக்கு தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல், மே 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.