புதுச்சேரியில் ஒரேநாளில் 712 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!
புதுச்சேரி மாநிலத்தில் ஒரேநாளில் 712 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு
புதுச்சேரி மாநிலத்தில் ஒரேநாளில் 712 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. புதுச்சேரியில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டது. இருப்பினும் தொற்று பாதிப்பு குறையாததால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் 9450 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 530 பேருக்கும், காரைக்காலில் 121 பேருக்கும், ஏனாமில் 36 பேருக்கும், மாஹேவில் 25 பேருக்கும் என மொத்தம் 712 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 1,07,826-ஆக அதிகரித்தது. இதனிடையில் புதுச்சேரியில் 15 பேரும், காரைக்காலில் 2 பேருக்கும், ஏனாமில் 1ஒருவர் உயிரிழந்த்துள்ளனர், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1601 ஆக உயா்ந்தது. இந்த நிலையில், 1215 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 96.731 ஆக அதிகரித்தது. மாநிலத்தில் தற்போது ஜிப்மரில் 462 பேரும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 323 பேரும், கொரோனா சிகிச்சை மையங்களில் 296 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 8,126 பேரும் என மொத்தம் 9498 போ் சிகிச்சையில் உள்ளனா் என சுகாதாரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் தற்போது கொரோனா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் போடப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசிக்கான வழிகாட்டுதல்களில் பின்வரும் திருத்தங்களை பின்பற்றுமாறு மத்திய சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்து 3 மாதத்திற்கு பிறகு தான் தடுப்பூசி போட வேண்டும். கொரோனா தொடர்பாக எந்த சிகிச்சை எடுத்து கொண்டாலும் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட வேண்டும். முதல் டோஸ் போட்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும், தொற்றிலிருந்து மீண்டு 3 மாதங்கள் கடந்த பிறகே 2-வது டோஸ் போட வேண்டும். வேறு ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும் அல்லது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றாலும் 4 அல்லது 8 வாரங்கள் கழித்த பிறகு கொரோனா தடுப்பூசி போட வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் 14 நாட்களுக்கு பிறகு ரத்த தானம் செய்யலாம்.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். தடுப்பூசி செலுத்திக்கொள்ள ரேபிட் டெஸ்ட் எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை என சுகாதாரத்துறையின் கூடுதல் செயலர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகளுடன் முதல்வர் ரெங்கசாமி முடிவு செய்துள்ளார்.