Chhattisgarh: போதை மருந்து கலந்த குளிர்பானம்; 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உட்பட 3 பேர் கைது..
சத்தீஸ்கர் பஸ்தார் பகுதியில், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
![Chhattisgarh: போதை மருந்து கலந்த குளிர்பானம்; 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உட்பட 3 பேர் கைது.. In Chhattisgarh Bastar area, two persons, including a boy, were arrested for raping a 13-year-old girl yesterday, a police official said. Chhattisgarh: போதை மருந்து கலந்த குளிர்பானம்; 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - சிறுவன் உட்பட 3 பேர் கைது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/17/01700c1344bbe4ed7ee899d8418037c71673925131877589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சத்தீஸ்கரில் – பஸ்தார் பகுதியில், நேற்று 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஜனவரி 11 மற்றும் 12 ஆம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போத்காட் காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பஞ்சம் தாக்கூர், (சிறுமிக்கு ஏற்கனவே தெரிந்தவர்) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் சார்கவான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அந்த பெண்ணை சந்தித்தார். நகரத்தில் உள்ள அவரது தாய்வழி அத்தையின் இல்லத்தில் விடுவதாக அவளை பைக்கில் அழைத்துச் சென்றார்.
"இந்த சம்பவத்தின் போது மேலும் இரண்டு குற்றவாளிகளான பிரிஜேஷ் மற்றும் பாலியும் உடன் இருந்தனர். வழியில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பைக்கை சாலையில் நிறுத்தி, போதை மாத்திரை கலந்த குளிர்பாணம் கொடுத்ததாகவும், பின் காட்டுக்குள் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி கூறினார். அதன்பிறகு, சிறுமி தனது பெற்றோருடன் திங்கள்கிழமை அதிகாலை 3 மணியளவில் சார்கவான் காவல் நிலையத்தை அடைந்து குற்றம் சாட்டப்பட்டவர் மீது புகார் அளித்தார்.
புகாரின் பேரில், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் மீதும் 376 (பாலியல் வன்கொடுமை) பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். IPC மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர், மேலும் இந்த விவகாரம் தொடர்பான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன" என்று CSP சுக்லா தெரிவித்தார். உள்ளூர் நீதிமன்றம் இரண்டு பேரையும் நீதிமன்றக் காவலில் வைத்து, சிறுவனை சிறார் இல்லத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)