IIT Kharagpur Calendar: ‛ஆரியர் படையெடுப்பு நடக்கவில்லை...’ ஐஐடி கரக்பூர் காலண்டரால் சர்ச்சை!
மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த மேய்ப்பாளர்கள் இந்தியாவுக்குள் வந்ததை பல்துறை ஆராய்ச்சியின் அடிப்படையின் மூலம் நிரூபிக்கப்பட்டது.
ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து வந்தவர்கள் அல்ல என்ற கருத்தாக்கத்தை ஐஐடி கரக்பூர் கல்வி நிறுவனம் தனது காலண்டரில் தெரிவித்துள்ளது.
உண்மை ஆதாரங்கள் இல்லாமல், இந்திய வரலாற்றை ஒருதலைபட்சமாக வரலாற்றை மறுமதிப்பீடு செய்யும் ஐஐடி-யின் இந்த செயலை வரலாற்றாசிரியர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
முன்னதாக, 2022ம் ஆண்டுக்கான காலண்டரில் ஐஐடி கரக்பூர் கல்வி நிறுவனம் வெளியிட்டது. இந்திய அறிவுசார் அடித்தளங்களை மீட்டெடுப்பது" என்ற பெயரிடப்பட்ட இந்த நாட்காட்டியில், 'பொய்யான ஆரியப் ஆக்கிரமிப்புக் கொள்கை, சிந்து சமவெளி நாகரிகம் மறுவாசிப்பு, வேதங்கள் சொல்லும் ரகசியத்தை உணர்தல் உள்ளிட்ட பல தலைப்புகள் இடம்பெற்றுள்ளது.
வரலாறு என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டியதே தவிர, நாட்காட்டியின் மூலம் இல்லை என்று 'ஆதி இந்தியர்கள்' என்ற புத்தகத்தின் ஆசிரியர் டோனி ஜோசப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பதிவில், "
வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்ன்றால், ஆரியப் ஆக்கிரமிப்புக் கொள்கை என்பது வலதுசாரிகளின் எண்ணங்களில் தான் உள்ளது. பாதி நூற்றாண்டு காலமாக இது ஆய்வுக் கோட்பாடாக கூட இல்லை. இத்தகைய, கொள்கையை எளிதில் தாக்க முடியும் என்ற காரணத்தினால் தான் இதனைப் பற்றி பேசி வருகின்றனர்.
கி.மு. 2000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்டக் காலத்தில் மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த மேய்ப்பாளர்கள் இந்தியாவுக்குள் வந்ததை பல்துறை ஆராய்ச்சியின் அடிப்படையின் மூலம் நிறுவனம் செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக, 'The Formation of Human Populations in South & Central Asia' என்ற இந்த ஆய்வுக் கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
First of all, Aryan Invasion Theory' currently lives on only in the imagination of Rightwing pamphleteers. It has not been an academic theory for half a century. The reason why it continues to live on in their imagination is that they would prefer to attack a strawman.
— Tony Joseph (@tjoseph0010) December 28, 2021
கி.மு. 3000க்கு முந்தைய காலத்தில் ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து புறப்பட்ட வேளாண்குடியினர் ஐரோப்பாவில் குடியேறுகின்றனர். இதன் மூலம், இந்தோ ஐரோப்பிய மொழி அங்கு பரவியது. அதேபோன்ற ஒரு குடியேற்றம் தான் தெற்காசியாவில் இந்தோ- ஐரோப்பிய மொழி காரணமாக அமைகிறது. மத்திய ஆசியா, ஈரான், ஆப்கானிஸ்தான், தெற்காசியாவில் வாழ்ந்த 837 பழங்குடிகளின் மரபணு அடிப்படையில் இது நிறுவனம் செய்யப்பட்டது. சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி வேளாண்குடிகளின் மரபணு ஒத்து போகவில்லை. 2019ம் ஆண்டில், ஹரப்பன் நகரின் ராக்கிகர்ஹி பகுதியில் வசித்த பெண்ணின் மரபணு ஆய்வும் இதனை உறுதி செய்தது.
எனவே, பின்னர் கி.மு. 2000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்டக் காலத்தில் மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த மேய்ப்பாளர்கள் இந்தியாவில் குடியேறினர் என்பது தான் அறிவியல் தரும் உண்மை. ஆனால், நாட்காட்டியின் மூலம் வரலாற்றை ஐஐடி மறுமதிப்பீடு செய்திருப்பது வேடிக்கையான செயல்" என்று தெரிவித்தார்.