ICMR Guidelines Diabetes : அதிகரிக்கும் கொரோனா பாதிப்பும்.. Type 1 Diabetes-உம்.. புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்தது ICMR!
டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வழிக்காட்டுதல் அறிவிப்பது இதுவே முதல்முறை
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது
கொரோனா தாக்கம் :
உலகமே கடந்த இரண்டு வருடங்களாக கொரோனாவின் பிடியில் சிக்கித்தவித்து கொஞ்சம் கொஞ்சமாக மீள தொடங்கியிருக்கிறது. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டுருக்கின்றனர். இந்தியாவில் மூன்று அலைகளாக கொரோனாவின் தாக்கத்தை பார்க்க முடிந்தது. இந்த சூழலில் நான்காவது அலைக்கும் வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 4,518 புதிய கொரோனா நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் மற்றும் ஒன்பது நோயாளிகள் இறந்துள்ளனர். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 25,000 ஐ தாண்டியுள்ளது. நாட்டில் தற்போது 25,782 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரத்தின்படி, 2779 நோயாளிகள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,72,547 ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்புக்கு இதுவரையில் 26 பேர் உயிரிழந்தனர்.
ICMR issues guidelines for the management of Type 1 Diabetes. The guidelines come at a time when the #COVID19 pandemic has disproportionately affected people with diabetes population, exposing them to a high risk for severe illness and mortality. pic.twitter.com/5Kqm0PIk7G
— ANI (@ANI) June 6, 2022
நீரிழிவு நோயாளிகள் :
கொரோனா நீரிழிவு நோயாளிகளை எளிமையாக தாக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சுவாச தொற்று, காய்ச்சல், தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவை அவர்களுக்கு கொரோனா பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கும்.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிலர் உயர் இரத்த அழுத்தம் உட்பட கடுமையான அறிகுறிகளை அனுபவிக்கின்றனர்.
டைப் 1 நோயாளிகளுக்கு வழிக்காட்டு நெறிமுறைகள் :
முன்னதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) டைப் 2, நீரிழிவு நோயாளிகளுக்கான வழிக்காட்டு நெறிமுறைகளை அறிவித்திருந்தது. இந்த சூழலில் டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கான புதிய வழிக்காட்டுதலை தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு அனைத்து வகையான கொரோனா நோய்த்தொற்றுகள் பரவுவதற்கும் அது உயிழப்பு அபாயத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் கூடுதல் கவனமாக இருங்கள். சரியாக சாப்பிடுங்கள் மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள், உங்கள் மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக அடிக்கடி உங்கள் இரத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை சரிப்பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களில் அதிகப்படியானோர் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். முன்னதாகவே அறிவிக்க வேண்டிய வழிக்காட்டுதலை தற்போது அறிவித்திருப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு உயிரிழப்பு அபாயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு வழிக்காட்டுதல் அறிவிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )