பிச்சை புகினும் கற்கை நன்றே! அழகாக ஆங்கிலம் பேசும் ஆர்த்தி.. படிக்க வைப்பதாக பாலிவுட் பிரபலம் உறுதி!
ஒரு விஷயத்தின் அருமை அது நம்மிடம் இருக்கும் போது தெரிவதில்லை. இங்கு நம்மில் பலருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தும் கூட அதை ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்வதில்லை.
ஒரு விஷயத்தின் அருமை அது நம்மிடம் இருக்கும் போது தெரிவதில்லை. இங்கு நம்மில் பலருக்கும் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைத்தும் கூட அதை ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்வதில்லை.
ஆனால், நேபாளத்தி ஒரு சிறுமி கல்வி கற்க காட்டிய ஆர்வம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. ஆர்த்தி என்ற அந்தச் சிறுமிக்கு பிறப்பிடம் என்னவோ இந்தியா தான். ஆனால் வறுமை அவளைத் துரத்த பிச்சை எடுப்பதற்காகவே அவர் நேபாளத்துக்குச் சென்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்த சிறுமி, நேபாளத்துக்கு சுற்றுப்பயணம் வந்த பாலிவுட் பிரபலம் அனுபம் கேரை பார்த்தவுடன் பரவாமாகிவிட்டார்.
நடைப்பயிற்ச்சியில் இருந்த அனுபம் கேர் மற்றும் அவரது நண்பரைப் பின் தொடர்ந்த அந்தச் சிறுமி, சார் வணக்கம். உங்களை இங்கே பார்த்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி என அழகாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அதனைப் பார்த்து அசந்து போன அனுபம் கேர் அந்தக் குழந்தையின் படிப்பை உறுதி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்ணும் அனுபும் கேருக்கும் இடையேயான உரையாடல்:
அனுபம் கேர்: நீ எப்படி இவ்வளவு அழகாக ஆங்கிலம் பேசுகிறாய்.
ஆர்த்தி: நன்றி சார். நான் இங்குதான் கற்றுக்கொண்டேன்
அனுபம் கேர்: உனக்கு எந்த ஊர்?
ஆர்த்தி: நான் இந்தியாவின் ராஜஸ்தானைச் சேர்ந்தவள்.
அனுபம் கேர்: இங்கே என்ன செய்கிறாய்?
ஆர்த்தி: நான் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
அனுபம் கேர்: நன்றாக ஆங்கிலம் பேசுகிறாய்.. படிக்கவில்லையா?
ஆர்த்தி: நான் பள்ளிக்கூடம் கூடச் செல்லவில்லை. ஆனால் நான் படிக்க விரும்புகிறேன்.
அனுபம் கேர்: நாங்கள் படிக்க உதவுகிறோம். உன் நம்பரைக் கொடு.
ஆர்த்தி: நிச்சயமாகத் தருகிறேன். என்னை தயவு செய்து படிக்க வையுங்கள். படிப்பி எனது வாழ்க்கையை மாற்றும். எனது எதிர்காலத்தை மாற்றும். நான் நன்றாகப் படிக்க விரும்புகிறேன்.
அனுபம் கேர்: நாங்கள் நிச்சயமாக உன்னைப் படிக்க வைக்கிறோம். எனது தொண்டு நிறுவனம் உன்னைப் படிக்க வைக்கும். நீ பள்ளியில் சேர்ந்துவிட்டதாகவே நினைத்துக் கொள்.
ஆர்த்தி: ரொம்ப நன்றி.
கற்கை நன்றே; கற்கை நன்றே;
பிச்சை புகினும் கற்கை நன்றே...
என்கிறது வெற்றி வேற்கை. பிச்சை எடுத்தாவது கல்வி கற்கலாம் என்பதே இதன் பொருள். பிச்சை எடுத்தே கல்வி கற்கும் ஒரு சிறுவன் இதற்கு உதாரணமாகத் திகழ்கிறாள் ஆர்த்தி.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுபம் கேர், நான் ஆர்த்தி என்ற இந்தச் சிறுமியை நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் பார்த்தேன். கல்விக்காக அச்சிறுமியின் ஆர்வம் நம்மை கலங்க வைத்தது. அச்சிறுமியை அனுபம் கேர் ஃபவுண்டேஷன் நிச்சயமாக படிக்க வைக்கும் என்று பதிவிட்டுள்ளார்.