Rich List 2024: அம்பானியை முந்திய அதானி..!3வது இடத்தில் இருக்கும் தமிழர் யார்?.! கூகுள் சுந்தர் சொத்து இவ்வளவா..!
Hurun India Rich List 2024: இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
Hurun India Rich List 2024: இந்தியாவின் பணக்காரர் பட்டியலில், முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி கௌதம் அதானி முதலிடத்தை அடைந்துள்ளார். இந்நிலையில், அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு, தமிழ்நாட்டினர் இடம் பெற்றுள்ளது குறித்து பார்ப்போம்.
பணக்காரர்கள் பட்டியல்:
ஹுருன் இந்தியா என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஆச்சர்யபடுத்தும் வகையில் 1,539 நபர்களின் சொத்து மதிப்பானது தலா ரூ.1,000 கோடிக்கு மேல் உள்ளது.
இந்த ஆண்டு பட்டியலில் முதலிடத்தில் உள்ள கௌதம் அதானி மற்றும் குடும்பத்தினர் சொத்து மதிப்பானது வியப்பை ஏற்படுத்தும் வகையில் 95 சதவீதம் அதிகரித்துள்ளது. அவருடைய மொத்த சொத்து மதிப்பானது ரூ.11,61,800 கோடியாக அதிகரித்துள்ளது. 2வது இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது 10,14,700 கோடியாக உள்ளது.
தமிழர்:
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த HCL டெக்னாலஜிஸின் ஷிவ் நாடார் மற்றும் குடும்பமானது, ரூ. 3,14,000 கோடி சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் தடுப்பூசி தயாரிப்பாளரான சைரஸ் எஸ். பூனவல்லா மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் குடும்பம் நான்காவது இடத்தைப் பிடித்தது. சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் திலீப் ஷங்வி ஐந்தாவது இடத்தை பிடித்தார்.
தொடர்ந்து டாப் 10:
கடந்த ஐந்து ஆண்டுகளில், கவுதம் அதானி, முகேஷ் அம்பானி, ஷிவ் நாடார், சைரஸ் எஸ். பூனவல்லா, கோபிசந்த் ஹிந்துஜா & குடும்பம் மற்றும் ராதாகிஷன் தமானி & குடும்பம் உட்பட ஆறு நபர்கள் தொடர்ந்து இந்தியாவின் முதல் 10 இடங்களில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாப் 10 மேலாளர்கள்:
உலகின் மிகச் சிறந்த தொழில்முறை மேலாளர்களின் முன்னோடியாக இந்தியா தன்னை நிரூபித்துக் கொண்டே வருகிறது என சொல்லலாம். அந்த வகையில் பட்டியலில் உள்ள தொழில்முறை மேலாளர்கள், வணிகம் நிறுவப்பட்ட பிறகு, அது வளர உதவியது மற்றும் இந்த மேலாளர்களுக்கு அவர்கள் தங்கள் செல்வத்தை உருவாக்கிய பங்கு குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.
Also Read: இளைஞர்களை கவரும் டெலிவரி வேலை! மொத்தம் இத்தனை ஊழியர்களா? சம்பளம் எவ்வளவு தெரியுமா?