கவுண்டர் டூ பிராமணர்.. இந்தியாவில் மொத்தம் 46 லட்சம் ஜாதிகள் இருக்காம்.. தெரிஞ்சுக்கோங்க
கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் (SECC) இந்தியா முழுவதும் மொத்தம் 46 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கும் சூழலில், கடந்த 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் (SECC) இந்தியா முழுவதும் மொத்தம் 46 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. கடந்த 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில், பனியா, கவுண்டர், பிராமணர் என இந்தியா முழுவதும் 4,147 ஜாதிகள் மட்டுமே இருந்துள்ளது.
கவுண்டர் டூ பிராமணர்:
இந்திய அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக ஜாதி உள்ளது. பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றையும் ஜாதிதான் தீர்மானிக்கிறது. இப்படியிருக்க, சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். இருப்பினும், எத்தனை சாதிகள் இருக்கிறது என்ற கணக்கெடுப்பு சுதந்திர இந்தியாவில் எடுக்கப்பட்டதில்லை. வெறும் பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது பற்றிய கணக்கெடுப்பு மட்டுமே எடுக்கப்பட்து வருகிறது. கடைசியாக, கடந்த 1931ஆம் ஆண்டு, அனைத்து ஜாதிகளின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த கணக்கெடுப்பின் அடிப்படையில்தான், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீடு வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இவர்களின், உண்மையான மக்கள் தொகை என்ன என்பது தெரியாத சூழலில், அதனை கணிக்கிடும் வகையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன.
46 லட்சத்திற்கு மேற்பட்ட ஜாதிகள்:
இருப்பினும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காமல் இருந்தது. இதற்கிடையே, மாநில அரசுகளே (பீகார், கர்நாடகா) எத்தனை ஜாதிகள் இருக்கிறது என்ற ஆய்வினை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், பீகாரில் இடஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்பட்டது.
இந்த சூழலில்தான், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் எத்தனை ஜாதிகள் இருக்கிறது என்ற கணக்கெடுப்பு நடத்தப்படும் என மோடி தலைமையிலான அறிவித்திருக்கிறது. இதற்கு முன்பு, கடந்த 2011ஆம் ஆண்டு, சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அதில், இந்தியா முழுவதும் மொத்தம் 46 லட்சத்திற்கும் மேற்பட்ட ஜாதிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது. கடந்த 1931ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பில் 4,147 ஜாதிகள் மட்டுமே இருந்துள்ளது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளில் எப்படி 4 லட்சத்திற்கு அதிகமான ஜாதிகள் உருவானது என்பது குறித்து விளக்கிய அதிகாரி ஒருவர், "சமூக பொருளாதார ஜாதி கணக்கெடுப்பில் ஜாதி குறித்து கேட்கப்பட்ட கேள்வி தெளிவாக இல்லை. தங்களின் சாதி என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எடுத்துக்காட்டாக, குப்தா, அகர்வால் என பதில் அளித்திருக்கின்றனர். ஆனால், குப்தா, அகர்வால் ஆகிய இரண்டு பிரிவுகளும் பனியா சாதியின் கீழ் வருகிறது. இதன் காரணமாகவே, ஜாதிகளின் எண்ணிக்கை 4 லட்சத்திற்கும் அதிகமாக கணக்கிடப்பட்டது.
மத்திய அரசின் சமீபத்திய தரவுகளின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 2,650 சாதிகள் இருக்கின்றன. பட்டியலின பிரிவில் 1,170 சாதிகளும் பழங்குடியின பிரிவில் 890 சாதிகளும் இருக்கின்றன. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை பொறுத்தவரையில், மாநில அரசுகள் தனியே ஒரு பட்டியலை வைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.





















