மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

25 ஆண்டுகால கொலை வழக்கு.. நடிகர்களாக மாறி பெர்ஃபாமன்ஸ் கொடுத்து கொலையாளியை பிடித்த போலீஸ்..

டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் வசித்து வந்த கிஷன் லால், 1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரவில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் வசித்து வந்த கிஷன் லால், 1997ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரவில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஆனால், கடந்த 25 ஆண்டுகளாக கொலையாளியைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. கிஷன் லால், கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்போது, முதல் குழந்தையுடன் கர்ப்பமாக இருந்துள்ளார் அவரது மனைவி சுனிதா.

இந்த மரண வழக்கு தொடர்பாக வழக்கு நடைபெற்று வந்தது. இந்த மரணத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ராமு என பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம்  அறிவித்தது. அவரும் ஒரு தினக்கூலிதான். அவரும், லால் இருந்த அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். டிஜிட்டல் யுகத்திற்கு முன்பு நடந்த இந்த கொலை தொடர்பான ஆவணங்களில் தூசி படியும் அளவுக்கு கடந்த 25 ஆண்டுகளாக, கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

அப்போது, பழைய வழக்குகளைக் கையாளப் பயிற்சி பெற்ற டெல்லி காவல்துறையின் வடக்கு மாவட்டத்தின் குழு ஆகஸ்ட் 2021 இல், வழக்கின் தனது கவனத்தை திருப்பியது. ஒரு வருடம் கழித்து, சுனிதாவுக்கு டெல்லி காவல்துறையில் இருந்து அழைப்பு வந்தது. உடனடியாக லக்னோவுக்கு செல்லும்படி அவர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

டெல்லி போலீசார் 50 வயது முதியவரைப் பிடித்து, இவர்தான் சுனிதாவின் கணவரைக் கொன்றதாக கூறியுள்ளனர். சந்தேக நபரின் அடையாளத்தை சுனிதா உறுதிப்படுத்தவே அவரை அழைத்துள்ளனர். தனது மகன் சன்னி (24) உடன் வந்த சுனிதா மயங்கி விழுவதற்கு முன்பு, அந்த நபர் ராமு என்பதை போலீஸாரிடம் உறுதி செய்தார்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (வட மாவட்டம்) சாகர் சிங் கல்சி பேசுகையில், "இந்தப் பெண் நீதியைப் பெறுவதற்கான அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துவிட்டார். மேலும் எங்கள் போலீஸ் குழு கடந்த ஆண்டு இந்த பழைய வழக்கில் விசாரணையை தொடங்கியபோது அவரிடம் சென்றுள்ளது. ஆனால், அவர் அவர்களிடம் பேசவில்லை. ஆனால், வழக்கில் தாமதம் நடந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

கால் நூற்றாண்டு பழமையான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை கண்டுபிடித்ததற்காக நான்கு பேர் கொண்ட காவல்துறை குழுவை அதிகாரிகள் பாராட்டினார். இதில், கொலையை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படங்களோ அல்லது அவர் இருக்கும் இடத்தின் துப்பும் கிடைக்கவில்லை.

இந்தக் குழுவில் சப்-இன்ஸ்பெக்டர் யோகேந்திர சிங், தலைமைக் காவலர்கள் புனித் மாலிக், ஓம்பிரகாஷ் தாகர் ஆகியோர் இன்ஸ்பெக்டர் சரேந்தர் சிங்கின் கீழ் உதவி காவல் ஆணையர் (செயல்பாடுகள்) தர்மேந்தர் குமாரின் வழிகாட்டுதலின்படி குற்றம்சாட்டப்பட்டவரை கண்டுபிடித்துள்ளனர். 

பல மாதங்களாக, எந்த நம்பிக்கையும் இன்றி, துப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையில் குழு தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த காலகட்டத்தில், டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் இக்குழு பல சந்தர்ப்பங்களில் ரகசியமாக விசாரணை நடத்தியது. டெல்லியில் உள்ள உத்தம் நகருக்குச் சென்றபோது ஆயுள் காப்பீட்டு முகவர்களாகக் காட்டிக் கொண்ட குழுவினர், இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பண உதவி செய்வதாகக் கூறி ராமுவின் உறவினரைக் கண்டுபிடித்தனர்.

உத்தரபிரதேசத்தின் ஃபரூகாபாத் மாவட்டத்தில் உள்ள கான்பூர் கிராமத்திற்கு சென்று, ராமுவின் உறவினர்களை சந்தித்தபோதும் அதே மாறி ஆயுள் காப்பீட்டு முகவர்களாக வேடமிட்டிருந்தனர். ராமுவின் மகன் ஆகாஷின் கைபேசி எண்ணை ஃபாரூக்காபாத்தில் போலீசார் கண்டுபிடித்தனர். அடுத்த கட்ட முயற்சிகள் மூலம் ஆகாஷின் பேஸ்புக் கணக்கை போலீஸ் குழு கண்டுபிடித்தனர். அதன் மூலம் அவர் லக்னோவின் கபுர்தலா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார்.

போலீசார் ஆகாஷை சந்தித்து, தற்போது அசோக் யாதவ் என்ற பெயரில் வசித்து வரும் அவரது தந்தை ராமுவின் இருப்பிடம் குறித்து விசாரித்தனர். அவர் தனது தந்தையை நீண்ட காலமாக சந்திக்கவில்லை என்றும், லக்னோவின் ஜான்கிபுரம் பகுதியில் வசிக்கும் அவர் தற்போது இ-ரிக்ஷாவை நடத்துவது மட்டுமே தெரியும் என்றும் கூறினார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக மெதுவாக முன்னேறி வந்த வழக்கு திடீரென்று வேகம் பிடித்தது. தலைமறைவாக இருந்த போலீஸ் டீம், ராமுவை பற்றி யாரேனும் விசாரித்து வரும் தகவல் ராமுவுக்கு தெரியலாம் என்றும், அவர் மீண்டும் தலைமறைவாகி விடலாம் என்றும் சந்தேகித்தனர்.

கொலையாளியை பிடித்த வேண்டும் என எண்ணி, இ-ரிக்ஷா நிறுவனத்தின் ஏஜெண்டுகள் என்ற போர்வையில், ஜான்கிபுரம் பகுதியில் உள்ள பல ஓட்டுனர்களைத் தொடர்பு கொண்டது காவல்துறை குழு. மத்திய அரசின் கீழ் புதிய இ-ரிக்ஷாவில் அவர்களுக்கு மானியம் வழங்குவதாகக் கூறி அவர்களுடன் உரையாடினர். 

அத்தகைய ஒரு உரையாடலின் போது, ​​செப்டம்பர் 14 அன்று ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த அசோக் யாதவ் (ராமு) என்பவரிடம் ஒரு இ-ரிக்ஷா ஓட்டுநர் அவர்களை அழைத்துச் சென்றார். விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டார். அவர் முதலில் ராமு அல்ல என்றும் டெல்லியில் வாழ்ந்தவர் அல்ல என்று மறுத்தார்.

ராமுவின் அடையாளத்தை அறிய பரூக்காபாத்தில் உள்ள ராமுவின் உறவினர்களை தொடர்பு கொண்ட போலீஸ் குழு, டெல்லியில் இருந்து சுனிதாவை அழைத்து அந்த நபர் உண்மையில் அவரது கணவரின் கொலையாளியா என்பதை உறுதிப்படுத்தினர். கடைசியாக அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டபோது, ​​ராமு (50) என்பவரும் பணத்துக்காக லால் கொலையை செய்ததாக ஒப்புக்கொண்டார்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget