(Source: ECI/ABP News/ABP Majha)
அசாம் முதல்வராகிறார் ஹிமந்தா பிஸ்வா சர்மா!
அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான மித்ரஜோத் கூட்டணி 75 இடங்களில் வெற்றிபெற்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.
அசாம் மாநிலத்தின் அடுத்த முதல்வராக அந்த மாநில பாரதிய ஜனதா கட்சியின் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா பொறுப்பேற்கிறார். அந்தக் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக அவர் இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. 2016-ஆம் ஆண்டு அமைந்த பாரதிய ஜனதா ஆட்சியில் அவர் கேபினட் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலச் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 2 மே 2021 அன்று வெளியானது.
இதில் அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான மித்ரஜோத் கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்று ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு ஆட்சியைத் தக்கவைத்து கொண்டது. இதற்கிடையே அசாம் முதலமைச்சராக ஹிமாந்த் பிஸ்வா பொறுப்பேற்பார் என்கிற இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
Also Read: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 8923.8 கோடி மானியம்.. தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன?