மேலும் அறிய

Sabarimala: பக்தர்கள் கவனத்திற்கு.. கேரளாவில் தொடரும் கனமழை.. சபரிமலைக்கு ரெட் அலர்ட் ..!

கேரள மாநில பத்தினம் திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.சபரிமலை ஐயப்பன் கோயில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது.

சபரிமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் ஐயப்ப பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென் - மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் கேரளாவில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கேரளாவில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது.

இந்த நிலையில் கேரள மாநில பத்தினம் திட்டா மாவட்டம் முழுவதற்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல் திருவனந்தபுரம், இடுக்கி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், கண்ணூர், காசர்கோடு தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சபரிமலை சீசன் வேறு தொடங்கி விட்டதால் கேரளாவுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். 

முன்னதாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். கடந்த நவம்பர் 17 ஆம் தேதி கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சாமி தரிசனம் செய்யும் நேரத்தை 16 மணி நேரமாக தேவஸ்தானம் போர்டு அதிகரித்துள்ளது. இந்த சபரிமலை ஐயப்பன் கோயில் பத்தினம் திட்டா மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. ஏற்கனவே அங்கு மழை பெய்து வருவது பக்தர்களுக்கு இடையூறாகவே இருந்து வருகிறது. 

மேலும் சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள், விமானங்களில் இருமுடிக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் பக்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் வரும் என கணிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சபரிமலை தேவஸ்தானமும், பத்தினம் திட்டா மாவட்ட நிர்வாகமும் சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.  மழை தொடரும் பட்சத்தில் பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பிருப்பதால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நிலக்கலில் இருந்து பம்பைக்கு செல்லும் இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையுடன் பக்தர்கள் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: Sabarimala Ayyappan Temple: களைகட்டும் சபரிமலை சீசன் ! பக்தர்களுக்காக தரிசன நேரத்தை அதிகரித்த தேவஸ்தானம் போர்டு!

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!
ஓணம் பண்டிகை: கேரளா விமானக் கட்டணம் கடும் உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!
ஆதார் அப்டேட்: பெயர், பிறந்த தேதி மாற்ற UIDAI விதித்த வரம்புகள்! முழு விவரம் இதோ..
ஆதார் அப்டேட்: பெயர், பிறந்த தேதி மாற்ற UIDAI விதித்த வரம்புகள்! முழு விவரம் இதோ..
மெட்ரோ நிலையத்தில் பூனைக்கு வேலை.. தலைமை அதிகாரியாக நியமனம்!
மெட்ரோ நிலையத்தில் பூனைக்கு வேலை.. தலைமை அதிகாரியாக நியமனம்!
5 ஆண்டுகளில் ரூ.4.20 லட்சம்... போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் முழு கணக்கு!
5 ஆண்டுகளில் ரூ.4.20 லட்சம்... போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தின் முழு கணக்கு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi:
Kanimozhi: "உதயநிதி வீட்டில் இருந்து ஜோதிடம் பார்க்கச் சொல்லி பேசுனாங்க.." தவெக எம்எல்ஏ கனிமொழி பேச்சு!
TVK IT Wing:
TVK IT Wing: "ஆபாசமும், அவதூறும் திமுக டிஎன்ஏ-வில் ஊறிப்போனது.." விட்டு விளாசிய தவெக
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
TTV Dhinakaran: MLAக்களுக்கு கார்.. உங்க சொந்த பணத்தை போட வேண்டியதுதானே? - விளாசிய டிடிவி தினகரன்!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
DMK: திமுக இனி சட்டசபைக்கே வராதா?.. துரைமுருகன் கொடுத்த பதில்.. அதிர்ச்சியில் தவெக!
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
Watch Video: முதலமைச்சர் விஜய்யை திட்டி.. அமைச்சர் கீர்த்தனாவை ஒருமையில் பேசிய திமுக எம்எல்ஏ! விரைவில் கைது ஆவாரா?
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
தமிழகத்தில் பத்திரப்பதிவு இனி வீட்டிலிருந்தே! டோக்கன் ரத்து, காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
SUV-ல் கடுமையாகும் போட்டி; ரெனால்ட் டஸ்டர் vs மாருதி விக்டாரிஸ்- எது பவர்ஃபுல்? ஓர் ஒப்பீடு!
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
சட்டசபை கலவரம்.. கருணாநிதி எழுதிய வசனம்.. மாற்றி பேசிய வையாபுரி.. இந்த கதை தெரியுமா?
Embed widget