மேலும் அறிய
Advertisement
7 PM Headlines: நொடிக்கு நொடி புயல் எச்சரிக்கை.. இன்றைய செய்திகள் ஒரு தொகுப்பாக உங்கள் முன்னால்.. தலைப்பு செய்திகள்!
6 PM Headlines: இன்று அதிகாலை முதல் மாலை 6 மணிவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கனமழை எச்சரிக்கை காரணமாக, நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்றிரவு நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்படாது என தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
- மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
- அரியலூர் விவசாயி மரணத்திற்கு காரணமான 8 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
- மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல்
- மதுரையில் நாளை தூய்மைப்பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
- மெரினா கடற்கரைக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
- அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - சீமான்
- தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் நாளை அதிகனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
- என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
இந்தியா:
- மக்கள் சக்திக்கு தலைவணங்குகிறேன் என குஜராத் வெற்றி குறித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.
- வட்கம் தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக ட்சிக்கு கிடைத்த ஒரே பிளஸ் பாயிண்ட் அக்கட்சியின் செயல் தலைவரான ஜிக்னேஷ் மேவானி வெற்றிபெற்றுள்ளார்.
- குஜராத் மாநில முதலமைச்சராக பூபேந்திர படேல் வருகின்ற டிசம்பர் 12ம் தேதி பதவி ஏற்கிறார்.
- போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 6 இந்தியர்களில் நிர்மலா சீதாராமனும் இடம்பிடித்துள்ளார்.
- பிரதமர் மோடி மீது குஜராத் மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் - மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
உலகம்:
- உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார் எலான் மஸ்க்.
- பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி; துறைமுகத்தில் ரூ. 44.47 கோடி இறக்குமதி பொருட்கள் தேக்கம்
- இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.77 கோடியாக உயர்ந்துள்ளது.
- இலங்கையில் கொரோனா கட்டுப்பாடுகள் கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
- சீனாவில் ஒரே நாளில் புதிதாக 25,321 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
விளையாட்டு:
- ப்ரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
- அறுவை சிகிச்சையின்போது ஒருவர் உலகக்கோப்பை கால்பந்தாட்ட தொடரை பார்த்து ரசித்த சுவாரசிய சம்பவம் போலந்தில் நடைபெற்றுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
ஐபிஎல்
க்ரைம்
ஆன்மிகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion