மேலும் அறிய
Advertisement
Headlines Today: தமிழகத்தில் 37 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்...இன்று பள்ளிகள் திறப்பு..இன்னும் பல முக்கியச்செய்திகள்
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- 37 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
- தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மைச் செயலாளராக மாற்றம் - புதிய சுகாதாரத்துறை செயலாளராக டாக்டர். பி.செந்தில்குமார் நியமனம்
- டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சி.முனியநாதன் நியமனம்
- சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான் - ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
- நாமக்கல் அருகே போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் வாகனம் மோதி பலி - முதலமைச்சர் இரங்கல்
- சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் - இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு
- சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் - அதிகாரிகள் விசாரணை
-
பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள், நீதிபோதனை, பாடவேளை, நூல்கள் வாசிப்பு கட்டாயம் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியா :
- கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
- பீகாரில் 4 கை, கால்களுடன் பிறந்த குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நடிகர் சோனுசூட் உதவி - குவியும் பாராட்டு
- ஆந்திராவில் பப்ஜியில் தோற்றதால் நண்பர்களின் கிண்டல் - 16 வயது சிறுவன் தற்கொலை
- ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களை கொண்ட காட்டு யானை மரணம்
- உக்ரைனில் இருந்து படிப்பை பாதியில் விட்டு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் - ரஷ்ய தூதரக அதிகாரி தகவல்
உலகம் :
- எரிபொருள் பற்றாக்குறையில் சிக்கித் தவிக்கும் இலங்கை - அடுத்த மாதம் முதல் வாகனங்கள் இயங்குவது சந்தேகம்!
- உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிப்பு - உறுதிமொழி ஏற்பு
விளையாட்டு :
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி
- டி20 உலகக்கோப்பைக்கான இந்திய ஆடும் லெவன் அணியில் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது - முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து
- முன்னாள் பார்சிலோனா கால்பந்து வீரர் கெவின் பிரின்ஸ் படெங் தனது காதலி வாலாண்டினா ஃப்ரடெக்ராடாவை மெட்டோபெர்ஸ் முறையில் நிலவில் வைத்து திருமணம் செய்தார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion