மேலும் அறிய
Advertisement
Today Headlines: இதுவரை உங்களைச் சுற்றி நடந்த முக்கிய நிகழ்வுகள்.. காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!
கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- சமூக வலைத்தளங்களில் சாதி, மத மோதல்களை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் அறிவுறுத்தல்
- அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது இந்திய தேர்தல் ஆணையம் - இபிஎஸ் நியமித்த நிர்வாகிகள் பெயரும் வலைத்தளத்தில் பதிவேற்றம்
- தவறை உணர்ந்து மீண்டும் கட்சியில் சேருவோர் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
- எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்தது ஏற்றுக் கொள்ள முடியாது - ஓ. பன்னீர்செல்வம்
- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் வரும் ஜூலை 28 ஆம் தேதி இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு - அறிக்கை தயார் செய்யும் பணியில் சிபிசிஐடி தீவிரம்
- மக்கள் இயக்க நிர்வாகிகளோடு நடிகர் விஜய் சந்திப்பு - பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக தகவல்
- கைதுக்கான ஆவணங்களை அமலாக்கத்துறை வழங்கியபோது செந்தில்பாலாஜி பெற மறுத்தது ஏன்? - ஆட்கொணர்வு மனு விசாரணையின் போது நீதிபதி கேள்வி
- கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் வீடு உட்பட 11 இடங்களில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை - 8 இடங்களில் சோதனை நிறைவு
- தூத்துக்குடி அருகே திருக்கோளூர் அகழாய்வில் 300க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் பங்கெடுப்பு
- அமர்நாத் கோயிலுக்கு சென்ற 21 பக்தர்கள் பனியில் சிக்கி ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு - தமிழ்நாடு அரசு உதவி செய்ய கோரிக்கை
இந்தியா:
- மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி - பாஜவுக்கு 2வது இடம் கிடைத்தது
- அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே. மிஸ்ராவுன் பதவி நீட்டிப்பு சட்ட விரோதமானது - உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- இமாச்சலப்பிரதேசத்தில் மழை, நிலச்சரிவால் 1000க்கும் மேற்பட்ட சாலைகள் துண்டிப்பு - சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மீட்கும் பணிகள் தீவிரம்
- மணிப்பூர் மக்களின் பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் - உச்சநீதிமன்றம் உத்தரவு
- இமயமலையில் ஹெலிகாப்டர் மோதி விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
- சென்னை - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் இன்று முதல் ஒரு மாதம் ரத்து - தெற்கு ரயில்வே
- கர்நாடகாவில் தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்படும் என அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
உலகம்
- அதிநவீன போர்விமானங்களை இயக்க உக்ரைனுக்கு பயிற்சி - ரூமேனியாவில் பயிற்சி அளிக்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவிப்பு
- கென்யாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக ஜாமீனில் வெளிவராத பிடிவாரண்ட் பிறப்பிப்பு
- அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் - வடகொரியா எச்சரிக்கை
விளையாட்டு
- இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார் ஜோகோவிச் - பெண்கள் பிரிவில் எலினா ஸ்விடோலினா அரையிறுதிக்குள் நுழைந்தார்
- டிஎன்பிஎல் தொடர்: இறுதி போட்டியில் கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்
- விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா கூட்டணி காலிறுதிக்கு முன்னேற்றம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion