மேலும் அறிய
Advertisement
Today Headlines: நேற்று நடந்ததையும், இன்று நடக்கப்போவதையும் அறிய..! காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!
Today Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- நாங்குநேரி சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது - முதலமைச்சர் ஸ்டாலின் வேதனை
- நாங்குநேரியில் வீடு புகுந்து பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரை சரமாரியாக வெட்டிய சக மாணவர்கள் - சாதிய வெறிக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்
- இந்தியாவின் பன்முகத்தன்மையை சாராம்சத்தை சிதைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது - தமிழ் என்ற வார்த்தையை கூட உச்சரிக்க பிரதமருக்கு தார்மீக உரிமை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்
- காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை - தமிழ்நாட்டிற்கான நீரை நீதிமன்றம் மூலம் பெற்றுத் தருவோம் என அமைச்சர் துரைமுருகன் உறுதி
- தமிழ்நாட்டில் பாஜகவிற்கு பொறுப்பு வகிக்கும் அரைவேக்காடுகள் போலவே மத்திய அமைச்சர்கள் பேசுவது ஆச்சரியமளிக்கிறது - அமைச்சர் எ. வ. வேலு
- தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேட்டில் குவிந்த பயணிகள் - கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
- ஈரோடு பவானி சாகர் அணையில் இருந்து ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது - 1,03,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு, 23846.46 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவு
இந்தியா:
- தண்டனைச் சட்டத்தில் இந்திய என்ற பெயருக்கு பதிலாக பாரதிய என்ற பெயரை இணைக்கும் புதிய சட்ட மசோதாக்கள் - மக்களவையில் தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா
- கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கிய மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு - நாடாளுமன்ற இரு அவைகளும் காலவரையரையின்றி ஒத்திவைப்பு
- சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கமும், நல்லுறவு அவசியம் என உச்சநீதிமன்றம் கருத்து - வெறுப்பு பேச்சு வழக்குகளை விசாரிக்க குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவு
- தமிழ்நாட்டிற்கான உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் - காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவு
- இன்று தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி - தோடர் இன மக்களை சந்தித்து பேசுவார் என தகவல்
- மல்யுத்த வீராங்கனைகளுக்கு எதிரான பாலியல் வழக்கில் பாஜக எம்.பி., பிரிஜ் பூஷனுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன - நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்
- நைஜர் நாட்டில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள் - மத்திய அரசு வேண்டுகோள்
உலகம் :
- ஏமனில் தீவிரவாதிகளிடம் பணய கைதியாக இருந்த ஐ.நா.சபை அதிகாரி உட்பட 5 பேர் விடுவிப்பு
- சிரியா ராணுவ வீரர்கள் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச்சூடு - 23 பேர் பலி
- ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 53 ஆக அதிகரிபு - 1000 பேரை தேடும் பணிகள் தீவிரம்
விளையாட்டு:
- ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி - இறுதிப்போட்டியில் இந்தியா - மலேசிய அணிகள் இன்று மோதல்
- இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான நான்காவது டி-20 போட்டி இன்று நடைபெறுகிறது - இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது போட்டி
- இன்ஸ்டாகிராமில் 600 மில்லியன் ஃபாலோவர்ஸ் - கால்பந்து வீரர் ரொனால்டோவிற்கு கிடைத்த பெருமை
- ஆசிய ஹாக்கி தொடரில் 5வது இடம் பிடித்தது பாகிஸ்தான் அணி
- பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரி - சுவீடன் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion