மேலும் அறிய
Advertisement
Morning Headlines today :உள்ளாட்சி தேர்தல் நிகழ்வுகள்..சிறார் தடுப்பூசி... இந்தியா - மேற்கிந்திய தீவுகள் 3 வது டி20..இன்னும் பல!
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..
தமிழ்நாடு:
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றது : பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது - தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு
- தமிழ்நாட்டில் மேலும் 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை தகவல்
- மதுரை அடுத்த திருமங்கலத்தில் கையெழுத்து இல்லாமல் வாக்குப்பதிவு போட்டதாக புகார் : இதனால் அந்த குறிப்பிட்ட வாக்குச்சாவடி மையத்தில் தேர்தல் நிறுத்திவைப்பு
- மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் வாக்கு கள்ள வாக்காக போடப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தகவல். யாரும் கள்ள வாக்கு போடவில்லை என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர் பழனிகுமார் விளக்கம்
- பெண்களுக்கான இட ஒதுக்கீடு: பலன் உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் - கனிமொழி எம்.பி
- மதுரையில் வாக்காளரின் ஹிஜாப்பை அகற்றச்சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்
இந்தியா:
- டெல்லியில் உள்ள அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்டிருக்கும் 12,430 புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால்
- கனடாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள், கட்டணம் செலுத்தும்முன் தாங்கள் சேர உள்ள கல்வி நிறுவனங்கள் முழுமையாக சரிபார்க்க வேண்டும் - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
- வேளாண்மைத்துறையை நவீனப்படுத்த 100 கிசான் ட்ரோன்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
- நாட்டில் 15 முதல் 18 வயதுடைய 2 கோடி சிறார்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
உலகம் :
- ஆப்கானிஸ்தான் ஜாபுல் மாகாணத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தான்.
- இங்கிலாந்தில் 196 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்று : ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட கட்டிடங்களில் மின்சாரம் துண்டிப்பு
- சுவிட்சர்லாந்தில் முககவசம் உள்ளிட்ட அனைத்து கொரோனா கட்டுபாடுகளும் திரும்ப பெறப்பட்டது.
- உக்ரைன் மீது நிச்சயம் ரஷ்யா படையெடுக்கும் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
விளையாட்டு :
- இலங்கை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
- ராஜவர்தன் ஹங்கர்கேகர் வயது முறைகேடு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையர் ஓம்பிரகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
- இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion