மேலும் அறிய
Advertisement
Morning Headlines today : தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பம்... பாதுகாப்பு பணிகள் தீவிரம்... இன்னும் பல முக்கியச் செய்திகள்
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..
தமிழ்நாடு:
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அமைதியாக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை
- தேர்தலையொட்டி வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, காலை 7.15 மணி அளவில் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க நடிகர் விஜய் வாக்குச்சாவடி வந்தடைந்தார்
- தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள குரூப் 2,குரூப் 2 ஏ பதவியில் 5529 பணியிடங்களுக்கு மே 21-ல்தேர்வு : டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் அறிவிப்பு
- இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி மியூசிக் நிறுவனங்களுக்கு உரிமையுள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவு
- கூடங்குளத்தின் அனுக்கழிவு சேமிக்கும் இடத்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் வலியுறுத்தல்
- 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வயது வரம்பில் இதுவரை 2 கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்
இந்தியா :
- அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட 38 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 11 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
- கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், பிப்ரவரி 21-ம் தேதி வரை சட்டப்பேரவை ஒத்திவைப்பு என சபாநாயக்கர் அறிவித்தார்
- புதுச்சேரி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 23-ம் தேதி தொடங்குகிறது
- திருச்சியில் இருந்து திருப்பதிக்கு மார்ச் 29-ம் தேதி முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு
- சீக்கிய தலைவர்களுக்கு தனது இல்லத்தில் பிரதமர் மோடி விருந்தளித்தார்
- பங்குச்சந்தை ரகசியங்களை வெளியில் தெரியப்படுத்தியதற்காக தேசிய பங்குச்சந்தை முன்னாள் இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணனுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகம்:
- தென்கொரியாவில் முதன்முறையாக ஒரே நாளில் 1 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு. ஒரே நாளில் 45 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
- உக்ரைன் எல்லையில் அதிக அளவில் குவிக்கப்படும் ரஷ்ய படைகள். 1 லட்சத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது
- பிரேசில் நாட்டில் தொடரும் கனமழை, நிலச்சரிவால் 130 பேர் உயிரிழப்பு
- போர்ச்சுகலில் ஏற்பட்ட கப்பல் தீ விபத்தில் ஏராளமான கார்கள் தீயில் எரிந்து சாம்பல்
விளையாட்டு:
- இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டியில் 8 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது
- 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2 வெற்றிகளுடன் முன்னிலை பெற்றிருக்கும் இந்திய அணி தொடரையும் கைப்பற்றியுள்ளது
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion