Headlines today | தியேட்டரில் 100% பார்வையாளர்கள்.. உக்ரைனில் போர் பதற்றம் - சில முக்கியச் செய்திகள்!
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..
தமிழ்நாடு:
தமிழ்நாடு முழுவதும் மழலையர் பள்ளிகள் இன்று திறப்பு; 2 ஆண்டுகளுக்கு பின் இன்று திறக்கப்படுகிறது
தியேட்டர்கள் இன்று முதல் 100சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி
விறுவிறுவென நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் - நாளை மாலையுடன் ஓய்கிறது
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - சென்னையில் பறக்கும் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு;
சென்னை நந்தனத்தில் இன்று தொடங்குகிறது புத்தகக் காட்சி - முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் - 1 லட்சம் தலைப்புகளில் விற்பனைக்கு தயாராக புத்தகங்கள்
தஞ்சை மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ
தமிழ்நாட்டில் மேலும் 1325 பேருக்கு கொரோனா
இந்தியா:
ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்கத் தயாராகும் இந்தியா - நடவடிக்கைகள் தீவிரம்
கர்நாடகா மாநில தும்கூரில் கல்லூரிகள் இன்று திறப்பு - ஹிஜாப் பிரச்னையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ள போலீசார் - 144 தடை
நடிகர் தீப் சித்து விபத்தில் உயிரிழப்பு - பல்வேறு தரப்பினர் அஞ்சலி
காஷ்மீரில் ரயில் பாதைக்கான நீண்ட குகைப்பாதை திறப்பு
உலகம்:
உக்ரைன் போர் பதற்றம் - இந்தியர்கள் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அறிவுறுத்தல் - யாரும் தற்போது உக்ரைன் செல்ல வேண்டாமென உத்தரவு
உக்ரைன் எல்லையில் இருந்து சில படைகளை வாபஸ் பெற்றது உண்மைதான் என ரஷ்யா உறுதி செய்துள்ளது. கடந்த சில நாட்களாகவே உக்ரைன் ரஷ்யா சர்ச்சர் உச்சமடைந்துள்ளதால் உலக நாடுகள் குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் பதற்றத்தில் உள்ளன.
ஒன்றரை லட்ச வீரர்களுடன் உக்ரைனை சுற்றி வளைத்துள்ள ரஷ்யா. படைகளை விலக்க முன் வந்துள்ள நிலையிலும் தொடர்ந்து நீடிக்கும் பதற்றம்
உக்ரைனுடம் போர் வேண்டாமென ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா - தேவையற்ற பேரழிவு ஏற்படுமென கருத்து
விளையாட்டு:
இந்தியா - மேஇ இடையே இன்று முதலாவது டி20 போட்டி - கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியை வெற்றியுடன் இந்தியா தொடங்குமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பு
இந்தியா - இலங்கை முதலாவது 20 ஓவர் போட்டி வரும் 24ம் தேதி தொடங்கும்
வானிலை:
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு