Headlines Today: ஐஐடியில் அதிகரிக்கும் கொரோனா.. குஜராத் த்ரில் வெற்றி.. சில முக்கியச் செய்திகள்!!
இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் சில..
இந்தியா:
டிஏபி உர மானியத்தை ரூ. 1,650 லிருந்து ரூ. 2,501 ஆக உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வெப்ப நிலையால் டெல்லிக்கு மஞ்சள் அலர்ட் விடப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது
இந்தி மொழி சர்ச்சையால் பரபரப்பான சோஷியல் மீடியா - கன்னட நடிகர் கிச்சா சுதீப்- அஜய் தேவ்கன் ட்விட்டரில் காரசார விவாதம்
பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு குறைத்த நிலையில் தமிழ்நாடு, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை வரியை குறைக்காததால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநர் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. அமைச்சரவை முடிவுக்கு எதிராக சொந்தக் கண்ணோட்டத்தில் செல்ல தனி அதிகாரமில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது
தமிழ்நாடு:
தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி
கொரோனா பரவல் காரணமாக நேரடி வகுப்புகள் நடைபெறாத நிலையில் புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
எம்ஆர்பியை விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என புதுச்சேரி காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னை ஐஐடியில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஐடியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்த்திரையுலகில் சிறந்து விளங்கும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ என்ற பெயரில் விருது வழங்கப்படும் என அமைசர் வெள்ளக்கோயில் சாமிநாதன் அறிவிப்பு
சென்னை புதுவண்ணாரப்பேட்டை பேருந்து நிலையத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட கல்லூரி மாணவிகள் 10 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
அயோத்யா மண்டப நிர்வாகத்தை அறநிலையத்துறை எடுத்த உத்தரவும் ரத்து, அதை உறுதிப்படுத்திய தனி நீதிபதி உத்தரவு ரத்தும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிரிக்கெட்:
சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
உலகம்:
ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்ட ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் நேற்று உக்ரைன் சென்றடைந்தார். அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவு அமைச்சரை சந்திக்க திட்டம்
மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஊழல் வழக்கு ஒன்றில் மேலும் 5 ஆண்டுகள் சிறை