Headlines Today, 8 Dec: 11 ஆயிரம் பேருக்கு வேலை... ரஜினி-சசிகலா மீட்... பிரபாஸ் ரூ.1 கோடி நிதி... இன்னும் பல!
Headlines Today, 8 Dec: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற, இன்று நடக்கவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* 2022 இல் குரூப் 2, குரூப் 4 பிரிவில் 11 ஆயிரம் பேருக்கு வேலை என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
* சென்னை விமான நிலையத்தில் ஒமிக்ரான் பரிசோதனைகள் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் போலி தடுப்பூசிகள் போடப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
* சென்னையில் நேற்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து சசிகலா நலம் விசாரித்தார்.
* தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
* சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினத்தில் நடந்த ரெய்டில் ரூ.1000 கோடி வருவாய் மறைத்தது அம்பலமாகியுள்ளது.
* கன்னியாகுமரியில் மீன் விற்பனை செய்த மூதாட்டியை அரசு பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நடத்துனர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
* கஞ்சா, குட்கா விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா:
* வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஆந்திர முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தெலுங்கின் முன்னணி நடிகரான பிரபாஸ் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.
* பேரறிவாளனை விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் தாமதத்தை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
* `மலம் அள்ளும் பணியின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை’ என நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ளது மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுக்கான துறை.
உலகம்:
* உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும், கூடுதல் படை வீரர்களை அனுப்ப உள்ளதாகவும் அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளாது.
* அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிமுகப்படுத்தவுள்ள புதிய சட்டமான `பில்ட் பேக் பெட்டர்’ முன்மொழிவு தடுக்கப்பட வேண்டும் என டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
* ஸ்விட்சர்லாந்தில் தற்கொலைக்கு பிரத்யேக கருவி கண்டுபிடிப்பு. ஒரு நிமிடத்தில் வலியில்லாம உயிர் பிரியுமாம்.
விளையாட்டு:
* ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் புகழ்பெற்ற ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தொடங்கியது.
* கேப்டன்சியை பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் பிசிசிஐ: ஒரு நாள் போட்டிக்கான் கேப்டனாக ரோஹித்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்