மேலும் அறிய
Advertisement
7AM Headlines: நடுங்க வைக்கும் பனி... சூடு குறையாத 7 மணி காலை தலைப்பு செய்திகள்... படிங்க இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கே.கே நகர் அரசு புனர்வாழ்வு மருத்துவமனையில் ரூ.28 கோடியில் ஒப்புயர்வு மைய கட்டிடம்: முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- இரட்டை இலை சின்னம் கேட்டு உச்சநீதிமன்ற வழக்கில் நாளை தீர்ப்பு : வேட்பாளரை அறிவிக்க ஓபிஎஸ், இபிஎஸ் திட்டம்
- காற்றழுத்த தாழ்வு நீடிக்கிறது; கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை- வானிலை ஆய்வு மையம் தகவல்
- வயது வந்தவர்களுக்கு மட்டும் என சான்று பெறும் திரைப்படத்தை மைனர்கள் பார்க்க அனுமதிப்பதை எதிர்த்து வழக்கு : தணிக்கைத்துறை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
- அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், பிப்ரவரி 3ம் தேதி சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
- தமிழ்நாடு அரசு சார்பில் வரும் 31ம் தேதியன்று தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- வரும் பிப்ரவரி 3ம் தேதி, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
- தமிழுக்கு முதல் எதிரி திராவிடம் தான் என தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும் செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா கூறியுள்ளார்.
இந்தியா:
- இறுதிகட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்தைரை; ராகுல் நடைபயணம் இன்றுடன் நிறைவு - ஸ்ரீநகரில் நாளை பொதுக்கூட்டம்
- குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள முகல் தோட்டம் இனி அமிர்த தோட்டம் - பெயரை மாற்றியது மத்திய அரசு
- மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி நொறுங்கியது - விமானி பலி, 2 பேர் படுகாயம்
- ஹிண்டன்பர்க் அறிக்கையால் ரூ.2.40 லட்சம் கோடி காலி: உலக பணக்காரர்கள் பட்டியலில் 7ம் இடத்திற்கு பின் தங்கிய அதானி
- அம்பேத்கர் முன்மொழிந்தது போல சமஸ்கிருதம் ஏன் ஆட்சி மொழியாக இருக்கக் கூடாது என முன்னாள் தலைமை நீதிபதி போப்டே தெரிவித்துள்ளார்.
- 55 பயணிகளை விமானத்தில் ஏற்றாமல்சென்ற ’கோ ஃபர்ஸ்ட்’ நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சியில் வீட்டிற்கு இரண்டு நாய்களை மட்டுமே, வளர்க்க அனுமதிக்கும் புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம்:
- அமெரிக்காவில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கறுப்பின இளைஞரை போலீசார் அடித்து கொன்ற சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இஸ்ரேலின் ஜெருசலேமில் மதவழிபாட்டு தலம் அருகே நடத்தப்பட்ட பயங்கர வாத தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஈரானில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளது.
- இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைகள் குறித்து பேச மேற்கத்திய நாடுகளுக்கு உரிமை இல்லை என்று கிம் யோ ஜாங் கூறியுள்ளார்.
- ஓமனில் பர்தா அணிந்து பள்ளிவாசலுக்குச் சென்ற புகைப்படங்களை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
விளையாட்டு:
- இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.
- உலகக் கோப்பை ஹாக்கியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பெல்ஜியம்- ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகிறது.
- பெண்கள் பிரிமீயர் லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion