மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உலகம் முழுவதும் நடந்தவை... ஒரு நிமிடத்தில் அறிய.. இதோ காலை 7 மணி தலைப்புச்செய்திகள்!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- பிரதமர் மோடியின் பேச்சை எடப்பாடி பழனிசாமி கேட்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் திடீர் அழைப்பு
- தமிழ்நாடு அரசின் அரசாணை செல்லும்; 12 கடல் மைல் தாண்டு சுருக்குமடி வலையை மீனவர்கள் பயன்படுத்த அனுமதி - உச்சநீதிமன்றம் உத்தரவு
- குடியரசு நாளை சிறப்பாக சென்னையில் கொண்டாட ஏற்பாடுகள் தீவிரம் - பாதுகாப்பு பணிக்காக 6,800 போலீசார் குவிப்பு
- முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் வரும் 29ம் தேதி திமுக எம்பிக்கள் கூட்டம்
- பள்ளிகள் ஆன்லைன் மூலம் அங்கீகாரம் பெறலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு
- தமிழ்நாடு அமைதி பூங்காவாக தொடர நடவடிக்கை வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்; ஆர்.எஸ்.எஸ் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு
- சித்த மருத்துவர் ஷர்மிகாவின் பதில் திருப்தி அளிக்காததால் வல்லுநர் குழு அவரிடம் எழுத்து பூர்வமாக விளக்கம் கேட்டுள்ளது.
- ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
- தமிழகத்தில் இயங்கி வரும் தனியார் பேருந்துகளில் கட்டண உயர்வுக்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா:
- சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சேலைகள், செருப்புகளை ஏலம் விட சிறப்பு வக்கீல் நியமனம் - பெங்களூர் உயர்நீதிமன்றம் உத்தரவு
- பிபிசி ஆவணப்பட தடை விவகாரத்தில் உண்மை வெளியில் வந்தே தீரும் - ராகுல் காந்தி
- தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகையால் காலை முதல் மதியம் 2 மணி வரை ஐடிஓ, சர்தார் படேல் மார்க், காஷ்மீரி கேட், சாணக்யாபுரி ஆகிய பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது.
- இந்திய தலைநகர் டெல்லியில் சக்தி வாயந்த நிலநடுக்கம் நேற்று பிற்பகலில் உணரப்பட்டது.
- கலை கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், சமூக சேவை, விளையாட்டு, கல்வியியல் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்கும் 5 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.
விளையாட்டு:
- ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்றது.
- நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்ததன் மூலம் இந்திய அணி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியது.
- இந்திய அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
உலகம்:
- பூமியின் மையப்பகுதி திடீரென சுழலுவதை நிறுத்தி அதன் சுழற்சியை எதிர்திசையில் சுழன்று வருகிறது என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
- கலிபோர்னியாவின் சான் மேடியோ கவுண்டியில் நேற்று பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என ஷெரிப் அலுவலகம் தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவின் அயோவாவில் உள்ள டெஸ் மொயின்ஸ் பட்டயப் பள்ளியில் நேற்று பிற்பகலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
- லண்டனில் முதுகலை பட்டம் பெற்ற இந்திய இளைஞர் ஒருவர் பட்டமளிப்பு விழாவில் கர்நாடக மாநிலக் கொடியை பிடித்து பெருமைப்பட்டது விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
- சீனாவில் கொரோனா எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை எட்ட தொடங்கியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion