Headlines Today, 14 Dec: சொர்க்கவாசல் திறப்பு.. பிரபஞ்ச அழகியான இந்திய பெண்..ரோஹித் விலகல்.. இன்னும் பல!
Headlines Today, 14 Dec: இன்றைய தினத்தின் சில முக்கியச் செய்திகள் சில..
தமிழ்நாடு:
* அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
* தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் ஜனவரி 5-ந் தேதி தொடங்க உள்ளதாக தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.
* தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிப்பு : தமிழ்நாடு அரசு
* ஜனவரி 3 ம் தேதி முதல் உயர்நிலை, மேல்நிலை பள்ளி மற்றும் கல்லூரிகள் சுழற்சிமுறையின்றி செயல்படும் : தமிழ்நாடு அரசு
* தமிழ்நாட்டில் கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக டிசம், 31 மற்றும் ஜனவரி 1 ம் தேதி கடற்கரைகளுக்கு செல்ல தடை.
* ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு
இந்தியா:
* வாரணாசிக்கு இரண்டு நாட்கள் பயணம் செய்துள்ள பிரதமர் மோடி, காசியில் உள்ள கங்கையில் புனித நீராடி வழிபாடு செய்தார். மேலும், ரூ.339 கோடியில் கட்டப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தின் முதல் கட்டத்தை தொடங்கி வைத்தார்.
* எதிர்ப்பலையால் பணிந்த சிபிஎஸ்இ; சர்ச்சைக்குரிய ஆங்கிலக் கேள்வி நீக்கம்
* ‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்’ - லெப்.ஜெனரல் அருண் தகவல்
உலகம்:
* சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து(21) இந்த ஆண்டுக்கான பிரபஞ்சி அழகி பட்டத்தை கைப்பற்றினார்.
* பிரிட்டனில் ஒமிக்ரான் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்ததாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல்
விளையாட்டு:
* இந்திய அணியின் கேப்டன் பொறுப்புகளில் இருந்து விலகிய கோலி டி20, 50 ஓவர்கள் கிரிக்கெட்டில் ஆபத்தான பேட்ஸ்மேனாக மாறுவார் என்று கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
* தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியதால், அவருக்கு பதிலாக குஜராத் வீரர் பிரியங்க் பஞ்சால் அணியில் இடம்பெற்றுள்ளார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்