Headlines Today, 13 Aug: கட்டண உயர்வு அறிவிப்பு... இந்தியா ஆதிக்கம்... வரலாறு காணாத மழை இன்னும் பல..!
கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
* சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ.பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமையச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாராஜன் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.
* தலைவர்கள், நிர்வாகிகள் உள்பட காங்கிரஸை சேர்ந்த 5000 பேர் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
* நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்ததை கண்டித்து 14 கட்சிகள் டெல்லியில் பேரணி.
* தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
* 2021-ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 152 காவல்துறை அலுவலர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இதில், தமிழகத்தைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள் எம் சரவணன், ஏ அன்பரசி, பி கவிதா, ஆர் ஜெயவேல், கே கலைச்செல்வி, ஜி மணிவண்ணன், பி ஆர் சிதம்பரமுருகேசன் மற்றும் சி. கண்மணி ஆகிய 8 பேர் விருது பெறுகிறார்கள்.
* தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.
* பொருளாதாரத்தில் மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தயார் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
* தொழில்நுட்ப கோளாறு காரணமாக EOS-03 செயற்கைக்கோள் ஏவும் திட்டம் தோல்வி அடைந்தது.
* வரலாறு காணாத மழையால் வெள்ளக்காடாக மாறியது துருக்கி. வெள்ளத்தில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரம்.
* இந்தியச் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டும், நிறுவனத்தின் சொந்த கொள்கைகளின் படியும் ராகுல்காந்தி கணக்கின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
* தமிழ்நாட்டில் நேற்று 1,942 பேருக்கு கொரோனா பாதிப்பு புதியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 33 பேர் நேற்று உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த 1892 பேர் குணம் அடைந்துள்ளனர்.
* லார்ட்ஸ் டெஸ்டில் 3 விக்கெட்டுக்கு 276 ரன்களைக் குவித்தது. கே.எல்.ராகுல் 127 ரன்களை குவித்து அதிரடியாக ஆடினார். ரோகித் சர்மா அரை சதம் அடித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற