மேலும் அறிய

10 PM Headlines: இன்று நாள் முழுவதும் உங்களைச் சுற்றி நடந்தது என்ன? இரவு 10 மணி செய்திகள்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • தீர்ப்புகள் அனைத்தும் இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டுமென உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த கருத்தை வரவேற்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி குறித்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு  புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகத்தை சந்தித்த ஆதரவு கோரிய நிலையில்,  ஏ.சி. சண்முகம் ஓபிஎஸ் கோரிக்கையை நிராகரித்துள்ளார். மேலும், பாஜக எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாங்கள் போட்டிவது உறுதி என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தானியங்கி நாப்கின் இயந்திரங்கள் அமைக்கலாம் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை யோசனை.
  • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்  திமுக கூட்டணி வேட்பாளராக இளங்கோவன் போட்டியிட காங்கிரஸ் தலைமையே முடிவெடுத்ததாக அமைச்சர் முத்துசாமி தகவல்.
  •  ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிப்பது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுவில் விவாதிக்க வேண்டியுள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
  • ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுமென அக்கட்சி பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிகவின் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக தான், அக்கட்சி அறிவிக்கும் வேட்பாளரின் பின்னால் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
  • திருச்சி, திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் தொழிலதிபர் வீட்டில் பட்டப்பகலில் 300 சவரன் நகை கொள்ளை.
  • அந்தமான் நிகோபார் தீவுகளில் இருந்து தான் இந்திய அரசாங்கம் தொடங்கியதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா

  • அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயரிடப்படாமல் இருந்த 21 தீவுகளுக்கு பரம் வீர் சக்ரா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சூட்டினார்.
  • மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்பில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி பகத் சிங் கோஷியாரி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள்.
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் அஸ்தியை தைவானில் இருந்து இந்தியா கொண்டு வர உதவ வேண்டுமென அவரது மகள் அனிதா போஸ் கோரியுள்ளார்.
  • கோவா மாநில உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 
  • அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே பாதுகாப்பு நிலவரத்தை ஆராய்ந்தார்.
  • ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து திருவள்ளூர் மாவட்டம் ,தச்சூர் வரை 126 கி.மீ ஆறு வழிச்சாலைக்கு மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது.
  • மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கென தனி தேர்தல் வாக்குறுதிகள் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

உலகம்

  • நேபாளத்தில் பொகாரா எனும் இடத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்த ஐந்து இந்தியர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
  • மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாட்டிஃபை தங்களின் பணி ஆட்களில் 6 சதவிகிதம் பேரை பணியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • 115 ஆண்டுகள் 322 நாள்கள் வாழ்ந்து வரும் மரியா பிரானியாஸ் மோரேரா என்ற பெண்மணி உலகின் வயதான பெண்மணி எனும் புதிய சாதனையை படைத்துள்ளார். 

விளையாட்டு

  • இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீது எழுப்பப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா- நியூசிலாந்து இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget