Headlines Today, 10 Dec: பிபின் ராவத் உடல் இன்று அடக்கம்... மாரிதாஸ் கைது... கோலி போய் ரோகித் .. இன்னும் பல!
Headlines Today, 10 Dec: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற, இன்று நடக்கவுள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
* எடப்பாடி பழனிசாமி காரின் மீது செருப்பு வீசிய அமமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
* தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
* நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
* ஒரு முதலமைச்சரால் எவ்வளவு முடியுமோ அதைவிட அதிகமாக பணியாற்றுகிறார் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதி பாராட்டினார்.
* அண்ணா பல்கலைக்கழகத்தில் 9 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
* தலைமை தளபதி மரணம் தொடர்பாக அரசுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
இந்தியா:
* ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
* முப்படை தளபதி பிபின் ராவத் உடலுக்கு மும்பை தளபதிகள் மரியாதை செலுத்தினர். இன்று மாலை முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
* டெல்லியில் நடைபெற்ற தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்து கொள்வதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
* ஜனவரி 31ஆம் தேதி வரை வெளிநாடுகளுக்கான விமான சேவை ரத்து நீட்டித்து விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
* பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவருமான தேஜஸ்வி யாதவ் டெல்லியில் கடந்த டிசம்பர் 9 அன்று டெல்லியைச் சேர்ந்த ரேச்சல் கோடின்ஹோவைத் திருமணம் செய்து கொண்டார்.
* ராஜஸ்தானில் பிரமாண்டமாக நடைபெற்ற பாலிவுட் நடிகர்கள் விக்கி கவுசல் - கேத்ரினா கைஃப் திருமணம் நடைபெற்றது.
உலகம்:
* முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல் தெரிவித்தன.
* 38க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ளது.
* நியூசிலாந்தில் இளைய தலைமுறையினர் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு:
* இந்திய ஒருநாள் அணிக்கு புதிய கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தது பிசிசிஐ. விராட் கோலியை நீக்கியது.
* விஜய் ஹசாரே தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பைக்கு எதிராக ஆடிய தமிழக அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்