Hardik Pandya Wrist Watch: ”அது 1.5 கோடி... நான் சட்டத்தை மதிப்பவன்” : கைப்பற்றப்பட்ட வாட்சுகள் குறித்து ஹர்திக் பாண்டியா விளக்கம்..
நான் சட்டத்தை மதிப்பவன் என்றும், கைக்கடிகாரம் விவகாரத்தில் என்மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் ஹர்திக் பாண்ட்யா விளக்கம் அளித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலககோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய அணி நேற்று காலை இந்தியா திரும்பியது. இந்த தொடரில் இந்திய அணியின் பிரதான ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா ஆடினார். இந்த நிலையில், துபாயில் இருந்து விமானம் மூலமாக மும்பை வந்த ஹர்திக் பாண்ட்யா முறையான வரியும் ஆவணங்களும் இல்லாமல் கோடிக்கணக்கான மதிப்புள்ள கைக்கடிகாரத்தை அணிந்து வந்ததாகவும், தனது பெட்டியில் கொண்டு வந்தததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மும்பை விமான நிலைய சுங்க அதிகாரிகள் அவரிடம் இருந்த இரண்டு கைக்கடிகாரத்தையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த இரண்டு கைக்கடிகாரத்தின் மதிப்பும் ரூபாய் 5 கோடி என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
— hardik pandya (@hardikpandya7) November 16, 2021
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா தனது டுவிட்டர் பக்கம் மூலமாக விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள விளக்கத்தில், “ கடந்த நவம்பர் 15-ந் தேதி( நேற்று) அதிகாலை துபாயில் இருந்து திரும்பியபோது, என்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு நானே மும்பை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் நேரடியாக சென்றேன். அங்கு அவர்களிடம் நான் தேவையான வரிகளை செலுத்தி வாங்கிய பொருட்களை எடுத்துச் சென்றேன். இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது.
மும்பை விமான நிலையத்தில் என்ன நடந்தது என்பதை நான் விளக்கமாக கூற விரும்புகிறேன். நான் வாங்கிய பொருட்களுடன் அதிகாரிகளிடம் நேரில் சென்று துபாயில் நான் சட்டப்படி வாங்கிய பொருட்களுக்கு என்ன வரிகளோ அதை செலுத்த தயார் என்று கூறினேன். சுங்க அதிகாரிகள் என்னிடம் பொருட்களை வாங்கிய ஆவணங்களை கேட்டபோது நான் அதை சமர்ப்பித்தேன். இருப்பினும், சுங்க அதிகாரிகள் நான் ஏற்கனவே செலுத்திய வரிகளை உறுதி செய்தனர். அந்த கைக்கடிகாரத்தின் மதிப்பு தோராயமாக சுமார் 1.5 கோடி ஆகும். சமூக வலைதளங்களில் 5 கோடி என்று வதந்தி பரவுகிறது.
நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அனைத்து சட்டமுகமைகளையும் நான் மதிக்கிறேன். மும்பை சுங்க அதிகாரிகளிடம் இருந்து எனக்கு நல்ல ஒத்துழைப்பு கிடைத்தது. நானும் அவர்களுக்கு என்னுடைய முழு ஒத்துழைப்பை வழங்கினேன். இந்த விவகாரத்தை தெளிவுபடுத்துவதற்கு தேவைப்படும் சட்டப்பூர்வமான ஆவணங்களும் உள்ளது. என் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றமவை.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஒருவர் வரி மோசடி செய்ததாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : T20 World Cup Prize Money: கோலியின் ஐபிஎல் வருமானத்தைவிட ஆஸி.,யின் பரிசுத்தொகை குறைவு - ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு? - முழு விவரம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

