T20 World Cup Prize Money: கோலியின் ஐபிஎல் வருமானத்தைவிட ஆஸி.,யின் பரிசுத்தொகை குறைவு - ஒவ்வொரு அணிக்கும் எவ்வளவு? - முழு விவரம்
டி-20 உலகக்கோப்பையின் மொத்த பரிசுத்தொகை 42 கோடி ரூபாய். இதில், சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்ற ஆஸ்திரேலியாவுக்கு 13.1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
டி-20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடந்து முடிந்துள்ளது. யாரும் எதிர்ப்பார்க்காத இரு அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற, ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக டி-20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலிய அணி.
முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து 172 ரன்கள் எடுத்தபோதும், சேஸிங்கில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது. சரி, உலகக்கோப்பைதான் யாருக்கு என தெரிந்துவிட்டதே, அந்த அணிக்கு கிடைத்த பரிசுத்தொகை விவரம் பற்றி பார்ப்போம், சற்று சுவாரஸ்யமானதுதான்.
இந்த டி-20 உலகக்கோப்பைக்கு தேர்ச்சியான 16 அணிகளும் பரிசுத்தொகை உண்டு. ஒவ்வொரு அணிக்கு, அந்த அணியின் பர்ஃபாமென்ஸைப் பொருத்து பரிசுத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக்கோப்பையின் மொத்த பரிசுத்தொகை 42 கோடி ரூபாய். இதில், சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்ற ஆஸ்திரேலியாவுக்கு 13.1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலியின் ஐபிஎல் வருமானத்தைவிட டி-20 உலகக்கோப்பை வின்னருக்கு வழங்கப்பட்டிருக்கும் பரிசுத்தொகை குறைவுதான்! ஆமாம், ஒரு ஐபிஎல் சீசனில் விளையாட விராட் கோலிக்கு வழங்கப்படும் வருமானத்தின் மதிப்பு - 17 கோடி ரூபாய்!
ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்பட்ட பரிசுத்தொகை முழு விவரம்:
ஆஸ்திரேலியா | 13.1 கோடி ரூபாய் |
நியூசிலாந்து | 7.15 கோடி ரூபாய் |
பாகிஸ்தான் | 4.5 கோடி ரூபாய் |
இங்கிலாந்து | 4.2 கோடி ரூபாய் |
இலங்கை | 2.02 கோடி ரூபாய் |
தென்னாப்ரிக்கா | 1.72 கோடி ரூபாய் |
நமிபியா | 1.42 கோடி ரூபாய் |
ஸ்காட்லாந்து | 1.42 கோடி ரூபாய் |
இந்தியா | 1.42 கோடி ரூபாய் |
வங்கதேசம் | 1.12 கோடி ரூபாய் |
ஆஃகானிஸ்தான் | 1.12 கோடி ரூபாய் |
வெஸ்ட் இண்டீஸ் | 82 லட்சம் ரூபாய் |
ஓமன் | 60 லட்சம் ரூபாய் |
ஐயர்லாந்து | 60 லட்சம் ரூபாய் |
நெதர்லாந்து | 30 லட்சம் ரூபாய் |
பப்புவா நியூகினியா | 30 லட்சம் ரூபாய் |
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்