Guwahati Fire Accident: கவுகாத்தியில் திடீர் தீ விபத்து; வெடித்து சிதறிய சிலிண்டர்கள்...! 100க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசம்..
குவஹாத்தியில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு கடும் தீ விபத்து இந்த தீ விபத்தில் பல சிலிண்டர் வெடித்து சிதறியது. நூற்றுக்கணக்கான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.
அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு கடும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல சிலிண்டர் வெடித்து சிதறியது. நூற்றுக்கணக்கான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.
அசாம் மாநிலத்தின் மிகவும் பிரபலமான நகர் கவஹாத்தி. இங்குள்ள ஃபதாசில் அம்பாரி பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தினால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இதுவரை யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Assam | Several houses were gutted in a massive fire that broke out in a slum colony in Fatasil Ambari area of Guwahati today. Firefighters brought the situation under control.
— ANI (@ANI) December 9, 2022
According to local police, no report of any casualty in the fire incident. pic.twitter.com/NZ2f6sxdow
அதிகாரிகள் கூறிய தகவலின்படி, பல எல்.பி.ஜி. சிலிண்டர்கள் வெடித்ததால் அப்பகுதியில் தீ மளமளவென பரவியது. நூற்றூக்கணக்கான வீடுகள் தீயில் எரிந்து சாம்பலானது. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் உள்ளிட்ட நிவாரண நடவடிக்கைகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இரண்டு அமைச்சர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கவுஹாத்தி போலீஸ் கமிஷனரும் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
Pray for Guwahati.. in every 2 days atleast 1 news of fire accidents is coming.
— P Dhanabir Sharma (@dhanabir_sharma) December 9, 2022
What is happening in Assam @himantabiswa ?
What Municipality is doing?
How the Fire department and the licensing of buildings and houses is going on?
Is these the result of transparency u were saying? pic.twitter.com/qdGwI7k16c
நவம்பர் 23 அன்று அசாம்-நாகாலாந்து எல்லையில் அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் போகாஜன் அருகே உள்ள லஹோரிஜான் பகுதியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில் ஏராளமான வீடுகள் மற்றும் கடைகள் எரிந்தன. அதனை தொடர்ந்து தற்போது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Himachal: இமாச்சல பிரதேசத்தின் முதலமைச்சர் யார்? தொடரும் சஸ்பென்ஸ்... காங்கிரஸ் முடிவு என்ன..?