மேலும் அறிய

Crime : பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா! 15வயது சிறுமிக்கு ஆண் குழந்தை! அதிர்ச்சி சம்பவம்!

உத்தரகாண்ட் மாநிலம் குருகிராமில் 15 வயது சிறுமி அவரது சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் குருகிராமில் 15 வயது சிறுமி அவரது சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் குருகிராமில் 15 வயது சிறுமி, தனது சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், தலைமறைவான அந்த நபருக்கு எதிராக IPC கற்பழிப்பு, குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கெர்கி தௌலா காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்த பெண் அளித்த புகாரில்,  தனது குடும்பத்துடன் கெர்கி தௌலா காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் வசித்து வருகிறோம். நான் மற்றும் எனது கணவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். எங்களது 15 வயது மகள் அருகில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

எங்களை போல், எனது கணவரின் தம்பியும் எங்கள் வீட்டுக்கு அருகில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். எனது மைத்துனர் அடிக்கடி எனது மகளை ஏதோ ஒரு சில காரணங்களை கூறி அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 26 ம் தேதி எனது மகளின் உடல்நிலை மோசமடைந்ததால், நான் அவளை குருகிராமில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கிருந்த மருத்துவர்கள் எனது மகளை பரிசோதித்து கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். மகளின் உடல்நிலையை பார்த்த இ.எஸ்.ஐ., டாக்டர்கள், சிவில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எனது மகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

கெர்கி தௌலா இன்ஸ்பெக்டர் ராஜேந்தர் சிங் கூறியதாவது: ”வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட அந்த சிறுமியும், பிறந்த குழந்தையும் தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தார். 

போக்சோ சட்டம் : 

கடந்த சில ஆண்டுக்களாக 16 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் இதுபோன்ற செய்திகள் சமூக ஊடங்கள் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும் நாம் காதுகளில் வந்து தஞ்சமடைக்கின்றது. இத்தகைய கொடுமைகள் இனி எந்தவொரு சிறுமிகளுக்கும் நடைபெற கூடாது எனவும், பொதுமக்கள் கடுமையான சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதுபோன்ற தவறு செய்பவர்களுக்கு காவல்துறையினரால் போக்சோ சட்டம் பதியப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். இந்த நிலையில், போக்சோ சட்டம் என்ன என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

18 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகளை பாதுகாக்கப்படுபதற்கு கொண்டுவரப்பட்டதே இந்த போக்சோ சட்டம். இந்த சட்டம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது. இதன் சட்டம் மற்றும் ஷரத்துகள் பின்வருமாறு : 

  • Penetrative sexual Assault - பலவந்தமான பாலியல் வன்கொடுமை செய்தல்
  • Aggravated penetrative sexual assault - தீவிரமான ஊடுருவும் பாலியல் தாக்குதல்
  • Sexual Assault - பாலியல் தொல்லை
  • Aggravated Sexual Assault - எல்லைமீறிய பாலியல் தொல்லை
  • Sexual Harassment - பாலியல் தொந்தரவு
  • Taking pornographic pictures of children - குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்தல்

இந்த ஆறுவகை பாலியல் குற்றங்களும் இந்த போக்சோ சட்டத்தின் கீழ் வருகின்றனர்.

  • 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை
  • இதே குற்றத்தை பெற்றோர், பாதுகாவலர் செய்தால் 10 ஆண்டுகள் சிறை
  • 12 வயதிற்கு கீழான குழந்தைகளை வன்கொடுமை செய்தால் - மரண தண்டனை (இந்த சட்டம் 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது)

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
ABP Premium

வீடியோ

Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
மதுரையில் 10,000 வேலைவாய்ப்புகள்.. பிரம்மாண்ட முகாம்: உடனே பதிவு செய்து பயன்பெறுங்கள்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் மார்கழி செவ்வாய்: திருமண வரம், செல்வ வளம் தரும் சிறப்பு தரிசனம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Bharat Taxi in Chennai: ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
ஊபர், ஓலாவிற்கு நெருக்கடி; விரிவுபடுத்தப்படும் ‘பாரத் டாக்ஸி‘; சென்னைக்கும் வருகிறது; முழு விவரம்
Embed widget