மேலும் அறிய

பல்கலைக்கழக விடுதியில் தொழுகை செய்த இஸ்லாமிய மாணவர்கள்! கொடூரமாக தாக்கிய மர்ம கும்பல் - குஜராத்தில் பரபரப்பு!

விடுதியில் தொழுகை செய்த இஸ்லாமிய மாணவர்களை மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gujarat: விடுதியில் தொழுகை செய்த  இஸ்லாமிய மாணவர்களை மர்ம கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

”இதுதான் தொழுகை செய்ய இடமா?”

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில்  ஆப்பிரக்கா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்டட நாடுகளைச்  சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.  அவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இப்பல்கலைக்கழகத்தில் நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பல மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அதாவது, இந்த பல்லைக்கழகத்தை சுற்றி எந்த ஒரு மசூதியும் இல்லை. தற்போது, ரம்ஜான் மாதம் என்பதால், விதியில் தங்கி இருக்கும் இஸ்லாமிய மாணவர்கள் விடுதியில் ஒரு இடத்தில் கூடி, இரவில் தொழுகை செய்கின்றனர். நேற்று விடுதியில் ஒரு இடத்தில் இஸ்லாமிய மாணவர்கள் சிலர் கூடி தொழுகை செய்துள்ளனர்.

அப்போது, வெளியில் இருந்து விடுதிக்குள் வந்த சில கும்பல், தொழுகை செய்துக் கொண்டிருந்த இஸ்லாமிய மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. மாணவர்களை தாக்கியதை பார்த்த பாதுகாவலர் இதனை தடுக்க முயன்றார். அப்போது, அந்த கும்பல் பாதுகாவலரை மீறி மாணவர்களின் அறைகளை அடித்து உடைத்ததோடு, உள்ளே இருந்த லேப்டாப், செல்போன், இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியது. 

"உங்களை தொழுகை செய்ய யார் அனுமதித்தது. இது தொழுகை செய்ய இடமா? என்று கேட்டு, இஸ்லாமிய மாணவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர்.மர்ம கும்பலின் தாக்குதலில் வெளிநாட்டு மாணவர்கள் ஐந்து பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இஸ்லாமிய மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல்:

இஸ்லாமிய மாணவர்களை அடித்த கும்பல், அங்கிருந்த தப்பிச் சென்றுவிட்டது.  பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒன்பது குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  ஒருவரை அடையாளம் கண்டுள்ளோம். 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீடியோக்களை ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுக்கள் இருகிறது" என்றார். 

ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும், ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். இதுகுறித்து  அவர் கூறுகையில், "அவமானம். இஸ்லாமியர்கள் அமைதியாக தொழுகை செய்துக் கொண்டிருக்கும்போது உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், பிரதமர் மோடியும் இதில் தலையிடுவார்களா? இஸ்லாமியர்கள் மீது காட்டப்படும் வெறுப்பு இந்தியாவின் நல்லெண்ணத்தை அழிக்கிறது" என்று குறிப்பிட்டிருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு பெருமிதம்!
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Embed widget