இனி, அரசின் நலத்திட்டங்கள் ஈஸியா கிடைக்கும்! புதுப்பிக்கப்பட்ட சுகம்யா பாரத் செயலி.. அசத்துதே
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் சென்றடையும் வகையில் மத்திய அரசின் முதன்மை முயற்சியான சுகம்யா பாரத் செயலி, மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் எளிதில் சென்றடையும் வகையில் மத்திய அரசின் முதன்மை முயற்சியான சுகம்யா பாரத் செயலி, மேம்படுத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கீழ்கண்ட பல்வேறு அம்சங்களுடன் இந்த செயலி மேம்படுத்தப்பட்டுள்ளது.
- பயனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைப்பு
- செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் சாட்பாட் தளம்
- அரசின் திட்டங்கள் தொடர்பான புதிய முன்னெடுப்புகள் குறித்த சுற்றறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள்
- மாற்றுத்திறனாளிகளுக்கான அரசின் நலத்திட்டங்களின் ஒருங்கிணைப்பு
இந்த மாதம் 26ஆம் தேதி வரை, அதாவது நேற்று வரை, இந்த செயலியில் மொத்தம் 14,358 பேர் பதிவு செய்துள்ளனர். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்கள் வாயிலாக 83,791 பேர் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ஆப்பிள் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம்!
சுகம்யா பாரத் செயலியை தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான கூகிள் பிளே ஸ்டோரிலும், ஐஓஎஸ் தளங்களுக்கான ஆப்பிள் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
Government revamps Sugamya Bharat App to strengthen Accessibility Support for Divyangjan and Elderly Citizens.
— All India Radio News (@airnewsalerts) June 27, 2025
More Intuitive & User-friendly App, with AI-powered chatbot, to provide real-time info on Govt Initiatives/Schemes.#AccessibleIndia #BarrierFreeIndia@pib_MoSJE… pic.twitter.com/T35boMjmFw
கடந்த 2021ஆம் ஆண்டு, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான துறையால் இந்த செயலி தொடங்கப்பட்டது. பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, தொழில்நுட்பம் உள்ளிட்ட அமைப்புகள் முழுவதிலும் உள்ள சிக்கல்கள் குறித்து புகாரளிக்க ஏதுவாக இந்தத் தளம் செயல்படுகிறது.
இதையும் படிக்க: TNEA Rank List: பொறியியல் தரவரிசை; 145 பேர் 200-க்கு 200; டாப்பில் காஞ்சிபுரம் சஹஸ்ரா, நாமக்கல் கார்த்திகா- அரசுப் பள்ளிகளில் யார்?
இதையும் படிக்க: SJ Suriya into Direction: நடிப்பு ராட்சசன் இயக்கும் ‘கில்லர்‘; மீண்டும் இயக்குநர் அவதாரத்தில் எஸ்.ஜே. சூர்யா - ஹீரோ யார் தெரியுமா.?





















