மேலும் அறிய

ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்ங்களா? - இனி போலி ரிவ்யூ கொடுக்க முடியாது: அரசின் அதிரடி விதிமுறைகள்!

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தயாரிப்புகளின் போலியான ஆன்லைன் கருத்துக்களை தடுக்க உதவும் அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளன.

ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தயாரிப்புகளின் போலியான ஆன்லைன் கருத்துக்களை தடுக்க உதவும் அரசாங்கத்தின் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளன. 

போலி ரிவியூவ்:

அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் அனைத்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை தானாக முன்வந்து வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடுவதன் மூலம் போலி விமர்சனங்களை தடுக்கவும் வாடிக்கையாளர்கள் தகுந்த சேவையை பெறவும் அரசாங்கம் புதிய விதிமுறைகளைக் கொண்டுவருகிறது. 

இருப்பினும், சம்பந்தப்பட்ட நிறுவனம் அல்லது மூன்றாம் தரப்பினரால் பயன்படுத்தப்பட்ட தனிநபர்களால் வாங்கப்பட்ட மற்றும் எழுதப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதை அரசாங்கம் தடை செய்துள்ளது. விரிவான பங்குதாரர் ஆலோசனைகளுக்குப் பிறகு நவம்பர் 25 முதல்  BIS தரநிலைகள் படி இந்த திருத்தம் நடைமுறைக்கு வரும். ஆனால் ஆன்லைன் தளங்களில் போலி கருத்துக்களின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் அவற்றை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும்.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும்  வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துக்களை வெளியிடுபவர்கள் (தயாரிப்பு மற்றும் சேவை) மற்றும் சப்ளையர் அல்லது மூன்றாம் தரப்பினரால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நுகர்வோர் கருத்துக்கள் ஆன்லைனில் வெளியிடும் நிறுவனத்திற்கும் இந்த தரநிலைகள் பொருந்தும். 

ஒரு நிறுவனம் இந்த தரநிலைகளுக்கு இணங்குகிறதா என்பதை சரிபார்க்க அடுத்த 15 நாட்களுக்குள் BIS சான்றிதழ் செயல்முறையுடன் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனங்கள் BSI உடன் இந்த தரச்சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் கருத்துக்களுக்கான தரத்தை உருவாக்கும் உலகின் முதல் நாடு இந்தியா தான், மேலும் பல நாடுகளும் போலி கருத்துக்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி திணறி வருகிறது.

" நாங்கள் நிலையான பாதையில் செல்ல விரும்புகிறோம். எந்த ஒரு நிறுவனத்திற்கும் இது கட்டாயம் இல்லை ஆனால் அச்சுறுத்தல் தொடர்ந்தால், எதிர்காலத்தில் அதை கட்டாயமாக்குவோம், ” என BIS அதிகாரி சிங் தெரிவித்தார்.

 ஈ-காமர்ஸ் தளங்களில் முடிவுகளை எடுப்பதில் ஆன்லைன் கருத்துக்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதைக் குறிப்பிடுகையில், மூன்று முக்கிய துறைகளில் கருத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.  அது வீடியோ அல்லது ஆடியோ வடிவத்தில் இருக்கும். மேலும் சுற்றுலா மற்றும் பயணம், உணவகங்கள், நுகர்வோர் பொருட்களுக்கு இது பொறுந்தும்.

BIS மதிப்பாய்வுகளை solicited and unsolicited என வரையறுத்துள்ளது. எந்தவொரு நிறுவனத்திலும் மதிப்பாய்வைக் கையாளும் பொறுப்புள்ள நபர் review administrator என்று அழைக்கப்படுவார். solicited  மதிப்பாய்வு என்பது சப்ளையர் அல்லது review administrator,  தயாரிப்புகள் அல்லது சேவைகளின் நுகர்வோரின் கருத்துக்களை குறிக்கிறது. மதிப்புரைகள் முறையானதாகவும், துல்லியமாகவும், தவறாக வழிநடத்தும் வகையிலும் இருக்கக்கூடாது என்று செயலாளர் கூறினார்.

மறுபரிசீலனை செய்பவர்களின் அடையாளத்தை அனுமதியின்றி வெளியிடக்கூடாது மற்றும் தகவல்களை வெளியிடுவது வெளிப்படையானது என்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். விமர்சனங்களின் சேகரிப்பு பக்கச்சார்பற்றதாக இருக்க வேண்டும், என்றார்.

"ஒரு மதிப்புரை வாங்கப்பட்டால் அல்லது மதிப்பாய்வை எழுதியதற்காக நீங்கள் அவருக்கு வெகுமதி அளிக்கிறீர்கள் என்றால், அது purchased review என்று தெளிவாகக் குறிக்கப்பட வேண்டும்" என சிங் கூறினார். e-commerce ஆனது ஒரு virtual shopping அனுபவத்தை உள்ளடக்கியதால், பொருட்களை பார்க்கவோ அல்லது பரிசோதிக்கவோ வாய்ப்பில்லாமல்,  ஏற்கனவே பொருட்களை அல்லது சேவைகளை வாங்கிய பயனர்களின் கருத்து மற்றும் அனுபவங்களைப் பார்க்க தளங்களில் வெளியிடப்படும் மதிப்புரைகளை பெரிதும் நம்பியிருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.  

இருப்பினும், போலியான கருத்துக்கள் மற்றும் நட்சத்திர மதிப்பீடுகள் ஆன்லைன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு நுகர்வோரை தவறாக வழிநடத்துகின்றன. Zomato, Swiggy, Reliance Retail, Tata Sons, Amazon, Flipkart, Google, Meta, Mesho, Blinkit மற்றும் Zepto போன்ற நிறுவனங்கள் ஆலோசனையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், இந்த தரநிலைகளுக்கு இணங்குவதாக உறுதியளித்துள்ளதாகவும் செயலாளர் கூறினார்.                

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Embed widget