மேலும் அறிய
ஆந்திராவில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்.. 5 பேர் உயிரிழப்பு..
ஆந்திராவில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் சங்கிரிபேட்டை என்ற பகுதியில் இன்று அதிகாலை இரண்டு அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், இரண்டு பேருந்து ஓட்டுநர்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலையோரம் இருந்த குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீயால் புகைமூட்டம் ஏற்பட்டதால், விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















