மேலும் அறிய

கோவாவை உலுக்கி எடுக்கும் காட்டுத்தீ.. 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை...என்னதான் ஆச்சு?

கடந்த 5-ஆம் தேதி முதல் ஏற்பட்ட தீ விபத்துகள் ஒவ்வொன்றின் மீதும் விரிவான விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அனைத்து DCFS களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் தேதி முதல், கோவாவின் பல்வேறு பகுதிகளில் காடுகள், தனியார் பகுதிகள், பொது இடங்கள், தோட்டங்கள், வருவாய் நிலங்கள் போன்றவற்றில் ஆங்காங்கே தீ விபத்துகள் பதிவாகியுள்ளன. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருடன் தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் இயக்குநரகம் போன்ற பிற துறைகள் இணைந்து செயல்படுகின்றன. 

தீ விபத்து தொடர்பான உள்ளூர் தேவைகளை முதன்மையாக நிவர்த்தி செய்வதோடு  பொருட்களையும் திரட்டி பாதுகாப்பை உறுதிசெய்து வருகின்றனர். தீ பரவி இருக்கும் இடங்களில் நெருப்பு கட்டுப்படுத்தப்பட்டு, இயற்கை வளங்கள் உட்பட உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படாமல் அல்லது குறைந்தபட்ச சேதாரத்துடன் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. 

சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை உன்னிப்பாக ஆய்வு செய்து அனைத்து பொறுப்பு அதிகாரிகளுக்கும் அவ்வப்போது தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:
 
தீயைத் தொடர்ந்து கண்காணிக்கக் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை:

இந்திய வன ஆய்வுத் துறை மூலம் தரப்படும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிப்பதற்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துகளை உடனடியாக கவனிக்க உடனுக்குடன் தொடர்ந்து  களப்பணியாளர்களுக்கு சரியான புவி சார் ஒருங்கிணைப்புகள் மற்றும் தீ இருக்கும் இடங்களின் வரைபடங்கள் பகிரப்படுகின்றன.

வனப்பகுதியைப் பல பிரிவுகளாகப் பிரித்து DCF / ACF நிலை அலுவலர்கள் தீ நிலைமையைக் கண்காணிப்பதற்காகப் பொறுப்பேற்றுள்ளனர்: பாதிக்கப்பட்ட பகுதிகள் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, DCF மற்றும் ACF நிலை அதிகாரிகளுக்கு தீ விபத்துகளை உடனடியாகக் கவனிக்க தீவிர மேலாண்மைக்காக பொறுப்புகள் தரப்பட்டுள்ளன. பல துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு 750-க்கும் மேற்பட்டோர் போர்க்கால அடிப்படையில் தீ விபத்துகளைக் கவனிப்பதற்காகக் களத்தில் உள்ளனர்.

அங்கீகரிக்கப்படாதவர்களின் நுழைவுக்குத் தடை, வன மற்றும் வனவிலங்குச் சட்டங்களின் கடுமையான அமலாக்கம்:

வனப் பகுதிகளுக்குள் அனுமதியின்றி நுழைவதைச் சரிபார்த்துத் தடுக்க DCFS-க்கு வனச் சட்டங்களை உறுதிசெய்து கடுமையாகச் செயல்படுத்தவும்  வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களின் அளவிலும் விசாரணைக்காக காவல் துறையிடம் பொறுப்பு தரப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைப்பு:

வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம், தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் இயக்குநரகம், உள்ளூர் சமூகம், பஞ்சாயத்து அமைப்புகள் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் கூட்டுக் குழுக்கள் போர்க்கால அடிப்படையில் தீ விபத்துகளை உடனடியாக நிர்வகிப்பதற்கு களத்தில் இருக்கின்றனர்.

பேரிடர் மேலாண்மை எந்திரங்களை செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்கள்  கோரிக்கை: வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வரம்பில் பேரிடர் மேலாண்மை இயந்திரங்களை அந்தந்த அதிகார வரம்பில் செயல்படுத்துவதற்காக தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையின் இயக்குநர் உட்பட ஆட்சியர்கள், காவல் துறையினர் ஆகிய உயர் அதிகாரிகளுக்குத் தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு அறிவுறுத்தல்கள் தரப்பட்டுள்ளன.

அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் பொது மக்கள் தொடர்பு: பெருமளவில் பொதுமக்களிடையே காட்டுத் தீ பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஊடகங்கள் மூலம் செய்ய வேண்டியவை  செய்யக்கூடாதவை என்ற வடிவில் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பற்றிய செய்திகள்  பரப்பப்படுகின்றன.

கடந்த 5ஆம் தேதி முதல் ஏற்பட்ட தீ விபத்துகள் ஒவ்வொன்றின் மீதும் விரிவான விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அனைத்து DCFS களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வனத் தீ தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்:

களப்பணியாளர்களும் களத்தில் உள்ள குழுவினரும் தீயை அணைக்க   புதர்களை அழித்தல் காய்ந்த இலை குப்பைகளை அகற்றுதல் நெருப்பை அணைத்தல் என தீ அணைப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தீ மீண்டும் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ மீண்டும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள தீ அணைக்கப்பட்ட அனைத்து இடங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Valentine's day : காதலில் வெற்றி பெற இந்த கோவிலுக்கு போனால் போதும்! இது உங்களுக்காக தான் !
Valentine's day : காதலில் வெற்றி பெற இந்த கோவிலுக்கு போனால் போதும்! இது உங்களுக்காக தான் !
மணிப்பூர்: திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎஃப் வீரர்! 2 வீரர்கள் பலி - 8 பேர் காயம்: நடந்தது என்ன?
மணிப்பூர்: திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎஃப் வீரர்! 2 வீரர்கள் பலி - 8 பேர் காயம்: நடந்தது என்ன?
Valentines Day Wishes for Singles: இன்னும் சிங்கிள் பசங்களா நீங்க? அப்போ உங்களுக்குத்தான் இந்த காதலர் தின வாழ்த்து!
Valentines Day Wishes for Singles: இன்னும் சிங்கிள் பசங்களா நீங்க? அப்போ உங்களுக்குத்தான் இந்த காதலர் தின வாழ்த்து!
பெங்களூரு டிராஃபிக்கிற்கு குட் பாய்.! வருகிறது டபுள் டக்கர் பாலம்...
பெங்களூரு டிராஃபிக்கிற்கு குட் பாய்.! வருகிறது டபுள் டக்கர் பாலம்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | GingeeChiranjeevi Controversy | TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Valentine's day : காதலில் வெற்றி பெற இந்த கோவிலுக்கு போனால் போதும்! இது உங்களுக்காக தான் !
Valentine's day : காதலில் வெற்றி பெற இந்த கோவிலுக்கு போனால் போதும்! இது உங்களுக்காக தான் !
மணிப்பூர்: திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎஃப் வீரர்! 2 வீரர்கள் பலி - 8 பேர் காயம்: நடந்தது என்ன?
மணிப்பூர்: திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎஃப் வீரர்! 2 வீரர்கள் பலி - 8 பேர் காயம்: நடந்தது என்ன?
Valentines Day Wishes for Singles: இன்னும் சிங்கிள் பசங்களா நீங்க? அப்போ உங்களுக்குத்தான் இந்த காதலர் தின வாழ்த்து!
Valentines Day Wishes for Singles: இன்னும் சிங்கிள் பசங்களா நீங்க? அப்போ உங்களுக்குத்தான் இந்த காதலர் தின வாழ்த்து!
பெங்களூரு டிராஃபிக்கிற்கு குட் பாய்.! வருகிறது டபுள் டக்கர் பாலம்...
பெங்களூரு டிராஃபிக்கிற்கு குட் பாய்.! வருகிறது டபுள் டக்கர் பாலம்...
Manipur President's Rule: கவிழ்ந்தது பாஜக ஆட்சி! மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.! நடந்தது என்ன?
கவிழ்ந்தது பாஜக ஆட்சி! மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.! நடந்தது என்ன?
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Valentines Day 2025 Wishes: தித்திக்கும் வாழ்த்துகளும்.. திகட்டாத காதலும்.. காதலர் தின வாழ்த்துகள்..
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.