Twitter : வட மாநில ட்விட்டர் கணக்குகள்.. ட்ரெண்டாகும் Go Back Modi.. என்ன நடக்கிறது ட்விட்டரில்?
பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வரவுள்ள நிலையில்,பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழ்நாடு வரும் பிரதமர்:
ஜப்பானில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று நாடு திரும்பிய பிரதமர் மோடி நாளை மே 26ம் தேதி தெலங்கானா மற்றும் தமிழ்நாட்டிற்கு வருகிறார். நாளை மாலை நேரு விளையாட்டு அரங்கில் ரூ.31,400 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டுக்கு அர்பணித்து வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக தெலங்கானா மாநிலம் ஐதராபாத் செல்லும் அவர் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்வி நிறுவனத்தின் 20வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதோடு, முதுநிலை மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றுகிறார்.
ட்ரெண்டாகும் #GoBackModi ஹேஷ் டேக்:
பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போதெல்லாம் ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஷ் டேக் உலக மற்றும் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடிக்கும். ஆரம்ப காலங்களில் தன்னிச்சையாக நடந்த இந்த ட்ரெண்டிங் போகப் போக கண்டுகொள்ளப்படாமல் போக, தற்போது சமூக வலைதளங்களில் இந்த ட்ரெண்டிங்கை செய்யும் பணிகளை தனியார் ஏஜென்சிகள் செய்துவருவதாகக் கூறப்படுகிறது.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது, திமுக தலைவர்களே கோ பேக் மோடி ட்ரெண்டிங்கில் ட்வீட் செய்திருந்தனர். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதை செய்வதில்லை.
பிரதமரை வரவேற்ற திமுகவினர்:
கடந்த ஜனவரியில் பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தபோது பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழ்நாட்டிற்கு விருந்தினராக வருகை தரும் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியமில்லை. திமுக எந்த கட்சிக்கும் எதிரியில்லை என்று கூறியிருந்தார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியோ, மக்களுக்கு எதிரான திட்டங்களை திமுக அரசு ஒருபோதும் ஆதரிக்காது. ஆனால் மாநில திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு வரும் பிரதமரை வரவேற்பது நமது கடமை என்று கூறியிருந்தார்.
ட்ரெண்டிங்கை யார் செய்வது?
இந்த நிலையில் ட்விட்டரில் #GoBackModi யை யார்தான் ட்ரெண்ட் செய்வது என்று பார்த்தால், இந்த ஹேஷ்டேகில் பதிவிடும் பாதிக்கும் மேலான கணக்குகள் புதிதாகத் தொடங்கப்பட்டவை, ஃபாலோயர்கள் குறைவானவை, தமிழ்நாட்டுக்கு சம்பந்தம் இல்லாதவை, வட மாநிலங்களில் இருந்து இயங்கும் கணக்குகளாக இருக்கின்றன. உதாரணத்திற்கு,
Sadhi Sheraz Lone என்ற பெயரிலான ட்விட்டர் கணக்கு இந்த மாதம் தான் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் பதிவு செய்திருப்பது இரண்டே ட்வீட்கள் தான். ஒன்று மே 23ம் தேதி பதிவு செய்தது. மற்றொன்று கோபேக் மோடி ஹேஷ் டேகில் போட்ட ட்வீட் மட்டும் தான்.
If i speak I'm in Big trouble 🫤🤐 #GoBackModi pic.twitter.com/7xmqUM8RjR
— Sadhi Sheraz Lone (@sadhi___) May 25, 2022
ப்ரீத்தி சவுத்ரி என்பவர் டெல்லியில் இருந்து #GoBackModi டேகில் ட்வீட் செய்துகொண்டிருக்கிறார்.
No captions required !👇🏻#GoBackModi pic.twitter.com/4KDsZVeg2D
— Priti Chaudhary (@HryTweet_) May 25, 2022
சில ஐடிகளுக்கு 50 ஃபாலோயர்கள் கூட இல்லாத நிலையில், இந்த டேகில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
#GoBackModi Acheee Din of India !!!! pic.twitter.com/XReY1A8hP9
— SanUnited (@SanUnited1) May 25, 2022
For all those who are trending #GoBackModi pic.twitter.com/YF1w4nep2e
— Utsav (@utsav10_utsav) May 25, 2022
#GoBackModi festival started right now the great achievements of Modi are
— Mohammad Kadir (@Mohamma04403173) May 25, 2022
1. Destroyed all autonomous body.
2. Destroyed growth of economy.
3. Dividing peoples by religious.
4. Destroyed the constitution.
5. Self publicity minister.
simply another Rajapakshe
சிலர் ஒரே ட்வீட் மற்றும் ஒரே புகைப்படங்களை பயன்படுத்தி ட்வீட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டான சில மணி நேரத்திற்குள்ளாக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்து நீக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.