ONGC Chopper Accident: அவசர அவசரமாக கடலில் தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்... 4 பேர் உயிரிழப்பு! திக் திக் நிமிடங்கள்
விபத்து நடைபெற்றபோது, மும்பை கடற்கரையிலிருந்து 50 கடல் மைல் தூரத்தில் உள்ள படகில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சி மேற்கொாள்ளப்பட்டது.
மும்பை அருகே உள்ள சாகர் கிரண் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் படகில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்தபோது, அது அரேபிய கடலில் விழுந்து விபத்துக்கு உள்ளானது.
ஒன்பது பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நான்கு பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. புதிதாக குத்தகைக்கு எடுக்கப்பட்ட பவன் ஹான்ஸ் சிகோர்ஸ்கி எஸ்-76 ஹெலிகாப்டர்தான் விபத்தில் சிக்கியுள்ளது.
All 9 persons onboard helicopter were rescued. Unfortunately, four of them, brought unconscious to the Mumbai base and taken to the hospital, lost the battle of life. #ONGC deeply mourns this loss. https://t.co/ljfmDesV3K
— Oil and Natural Gas Corporation Limited (ONGC) (@ONGC_) June 28, 2022
ஆறு ஓஎன்ஜிசி ஊழியர்கள், ஒரு ஒப்பந்த பணியாளர் ஆகியோர் ஹெலிகாப்டரில் பயணித்திருப்பது கண்டறிப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டிருந்த மிதவைகளின் மூலம் ஹெலிகாப்டர் தரையிறக்க முயற்சிக்கப்பட்டது.
கடலுக்கும் கரைக்கும் இடையே, பொருள்கள் மற்றும் வீரர்களை கொண்டு செல்ல இந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது. உயிரிழந்த நான்கு பேரில் மூவர் ஓஎன்ஜிசி ஊழியர்கள் ஆவர்.
Six rescued so far https://t.co/4DTUZZAFrW
— Oil and Natural Gas Corporation Limited (ONGC) (@ONGC_) June 28, 2022
மும்பை கடற்கரையிலிருந்து 111 கிமீ தூரத்தில் அமைந்துள்ள படகில் ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்தபோது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தரையிறக்கப்படும் பகுதி 1.5 கிமீ தூரத்தில் இருந்தபோது கடலுக்குள் ஹெலிகாப்டர் விழுந்தது. ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது, சாகர் கிரணில் இருந்து சென்ற மீட்பு படகின் மூலம் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக மும்பை எம்ஆர்சிசியால் திருப்பி விடப்பட்ட பொருள்களை எடுத்து செல்லும் கப்பலான மால்வியா-16 மூலம் ஐந்து பேர் மீட்கப்பட்டனர்.
இதையும் படிக்க: டிடிவி தினகரனோடு உறவு; குடும்பத்தை மட்டும் பார்க்கிறார் ஓபிஎஸ்: பரபரப்பை கிளப்பும் உதயகுமார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்