மேலும் அறிய

Watch Video: மீடியாவுடன் சென்ற முன்னாள் மிஸ் பட்டம் வென்ற பெண்.. வேறொரு பெண்ணுடன் சிக்கிய கணவர்..!

கடந்த மே 30ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள தனது கணவர் தேஜாவின் அலுவலகம் முன் முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் பட்டம் வென்ற  நக்ஷத்ரா, தனக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினார். 

முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் பட்டம் வென்ற நக்ஷத்ரா, அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்ததை கையும் களவுமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், தன்னை விவாகரத்து செய்யாமல் தனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். 

கடந்த மே 30ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள தனது கணவர் தேஜாவின் அலுவலகம் முன் முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் பட்டம் வென்ற  நக்ஷத்ரா, தனக்கு நீதி கோரி போராட்டம் நடத்தினார். 

என்ன நடந்தது..? இவர்களுக்குள் என்ன பிரச்சனை..? 

முன்னாள் மிஸ் விசாகப்பட்டினம் நக்ஷத்ரா, கடந்த 2013ம் ஆண்டு ஒரு படத்தில் நடிக்கும்போது தேஜாவை சந்தித்தார். மேலும், இந்த அறிமுகம் நட்பாக தொடங்கி காதலாக மாறியது. இதையடுத்து, 4 வருட காதலுக்குபின் நக்ஷத்ரா - தேஜா காதலர்கள் 2017ல் திருமணம் செய்து தம்பதி அந்தஸ்தை பெற்றனர். இந்தநிலையில், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ஒரு மகள் இருப்பதாக தெரிகிறது. இதுவரை சுமூகமாக இருந்து வந்த இவர்களது வாழ்க்கை தடம் புரண்ட தொடங்கியது. சினிமா துறையில் வேலை செய்து வந்த அவர், பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், தேஜா தனது மனைவி நக்ஷத்ராவிடம் தன்னை சந்திக்கும் பெண்கள் தன்னை அழைப்பதாக தெரிவித்து நல்லபிள்ளைபோல் நடிப்பாராம். 

இந்தநிலையில், இருவருக்கும் இதுதொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவினை தொடங்கியதாக கூறப்படுகிறது.   இந்தநிலையில்தான் கடந்த வியாழக்கிழமை, நக்ஷத்ரா தனது கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்தபோது செய்தியாளர்கள் உதவியுடன் கையும் களவுமாக பிடித்துகொடுத்தார். 

இதுகுறித்து நக்ஷத்ரா கூறுகையில், தேஜா முன்னதாக கடற்படை கப்பல்துறை யார்டில் பணிபுரிந்தார். பப்ஜி கேமுக்கு அடிமையாகி பணி செல்வதில்லை. செல் போனில் கேம் விளையாடும்போது, அதில் விளையாடும் பெண்களிடம் கேவலமாக பேசுவதும் வழக்கம். இதனால் அதிகாரிகள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர். தொடர்ந்து பப்ஜி மூலம், சினிமா துறை மூலம் பல பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்தார். இதுகுறித்து நான் கேட்டபோது உடல்ரீதியாவும், கூடுதல் வரதட்சணை கேட்டும் சித்ரவதை செய்தார். 

தேஜா திரைப்படங்களின் மீது பைத்தியம் கொண்டவர். அவர் திரைப்படங்களில் ஹீரோவாக வேண்டுமென்று தனது நகை முழுவதையும் அடகு வைத்தார். மேலும், எனது பெற்றோரிடம் இருந்தும் பணம் வாங்கினார். இந்த பிரச்சனையில் தங்களுக்குள் எப்போதும் சண்டை இருந்து வந்தது.

அன்றைய நாளில் அவர்கள் ஒன்றாக அவரது சினிமா அலுவலகத்தில் இருந்தார். கதவை திறந்துகேட்டபோது அது எனது படத்தின் நாயகி, படப்பிடிப்பு தொடர்பாக பேசினோம் என்றார். இதுபற்றி, படத்தின் இயக்குநரிடம் கேட்டபோது, அப்படியில்லை என்று தெரிவித்தார். 

எனது கணவர் தேஜா ஒரு பெண் வெறியர். எனது மூத்த சகோதரியை கூட அதே நோக்கத்துடன்தான் பார்ப்பார். இதேபோல், பல பெண்களுடன் செல்போனில் ஆபாசமாக பேசுவார். இதுபற்றி கேட்டபோது என் காலை உடைத்துவிட்டார். 

தன் கணவன் எத்தனை கொடுமைகள் செய்தாலும் அதை குழந்தைக்காக சுமந்து கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்து அவரை கையும் களவுமாக பிடித்தேன்” என்று தெரிவித்தார். 

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்த அவர், “ நக்ஷத்ரா இதுபோன்று என் மீது பல பொய்யான வழக்குகளை போட்டுள்ளார். அவை இன்றுவரை நிலுவையில் உள்ளது. என்னுடன் அறையில் இருந்த பெண் ஆடிஷனுக்காக வந்த பெண். புதிய படம் பண்ணுவதற்காக திட்டமிட்டிருந்தோம்.” என்று தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Embed widget