முன்னாள் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..
நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 68.
![முன்னாள் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்.. Former CBI director Ranjit Sinha passes away முன்னாள் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/16/c7bec906398f044f6229532434f99e52_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் சின்கா டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 68. இரஞ்சித் சின்ஹா இந்தியக்காவல் பணியின் 1974-ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த அதிகாரியாக தன பயணத்தைத் தொடங்கியவர். இந்திய-திபெத் எல்லைக் காவல்படை (ITBP) மற்றும் இரயில்வே பாதுகாப்புப் படைகளில் தலைமை காவல் இயக்குநராக பணிபுரிந்தவர்.
இன்று அதிகாலை 4:30 மணிக்கு ரஞ்சித் சின்ஹாவின் உயிர் பிரிந்ததாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்தது. கோவிட் நோய் பாதிப்பு தொடர்பான மரணமாக இருக்கலாம் என்று மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நேற்று ( ஏப்ரல் 15) இரவு சின்ஹாவுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிக்கின்றன.
பள்ளி மற்றும் கல்லூரிக்கல்வியை பாட்னாவில் முடித்தவர் ரஞ்சித் சின்ஹா. இவரது தந்தை என்.எஸ். சின்ஹா பீஹார் மாநில அரசில் விற்பனைவரி ஆணையராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)