Cheetahs at Kuno Park: மீண்டும் 5 சிவிங்கிப் புலிகள் வனப்பகுதிக்குள் விடப்படும்.. தகவலை வெளியிட்ட சுற்றுச்சூழல் அமைச்சகம்!
cheetahs at Kuno Park:வனப்பகுதிக்குள் விடப்படும் சிவிங்கிப் புலிகள்.
மத்திய பிரேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவின் பாதுகப்பட்ட பகுதியிலிருந்து ஐந்து சிவிங்கிப் புலிகளை வனப் பகுதிக்குள் திறந்துவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
வரும் ஜூன் மாத மழை காலத்திற்குள் நமீபியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட மேலும் 5 சிவிங்கிப் புலிகளை வனப்பகுதிக்குள் திறந்துவிட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக, அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து சிவிங்கிப் புலிகள் குனோ தேசிய பூங்காவிலிருந்து வனப்பகுதிக்குள் விடப்படும் என்றும், அவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே திரும்பவும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் விடப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நமீபியாவிலிருந்து அழைத்தவரப்பட்ட எட்டு சிவிங்கிப் புலிகளில் நான்கு ஏற்கனவே வனப்பகுதிகளில் விடப்பட்டுள்ளன. சிவிங்கிப் புலிகளின் உடல்நல ஆரோக்கியம், நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வனப்பகுதிக்குள் விட முடிவெடுக்கப்படுகிறது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள ப்ரீடோரியா பல்கலைக்கழக கால்நடை மருத்துவர் Adrian Tordiffe, உள்ளிட்ட முக்கிய நபர்களின் குழுவினர் சிவிங்கிப் புலிகளை கண்காணித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து சிவிங்கிப் புலிகளும் உடல்நலனோடு ஆரோக்கியமாக உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சிவிங்கிப் புலிகள் திட்டம்:
இந்தியாவில் சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் வகையிலும், அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் நமீபியா நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சிவிங்கி புலிகள் கொண்டுவர திட்டமிடப்பட்டது. அதற்காக நமீபியா அரசுடன், இந்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது.
அதையடுத்து, நமீபியா நாட்டில் இருந்து கடந்த ஆண்டு 8 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.
அதனை தொடர்ந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன. அந்த சிவிங்கிப் புலிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குனோ தேசிய் பூங்காவில் விடப்பட்டன. இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிவிங்கிப் புலிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் உள்ள சமீப தினங்களுக்கு முன்பு 'ஷாஷா' பெண் சிவிங்கிப் புலி மார்ச் 27 ஆம் தேதி இறந்தது. அந்த சிவிங்கி புலிக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சினை காரணமாக இறந்ததாக கூறப்பட்டது. இது, நாட்டில் உள்ள பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்தியாவில் உள்ள சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்தது.
நிலப்பரப்பில் அதி வேகம் ஓடக் கூடிய திறன் பெற்ற சிவிங்கிப் புலிகள் (cheetahs) ஏற்கனவே இந்தியாவில் இருந்துள்ளது. ஒரு காலத்தில் இதன் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக இருந்துள்ளது. ஆங்கிலேயர் வருகையால் வேட்டையாடப்பட்டது உள்ளிட்ட பல காரணங்களால் இந்தியாவில் சிவிங்கிப் புலி இனத்தின் எண்ணிக்கை குறைந்துபோனது. பின்பு, இந்தியாவில் சிவிங்கிப் புலி இல்லாமலே போனது. தற்போது ப்ராஜெட்க் டைகர் (’Project Tiger') மூலம் இந்தியாவில் சிவிங்கிப் புலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1947 ஆம் ஆண்டில் இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தில் சிவிங்கிப் புலிகள் காணப்பட்டன. பின்னர், 1952-இல் சிவிங்கிப் புலி இனம் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. சிவிங்கிப் புலி வாழும் இடமாக இந்தியா இருக்க வேண்டுமென்றும், நாட்டில் சிவிங்கிப் புலியை அறிமுகம் செய்வதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்திருக்கிறது. அதன் அடிப்படையில், தென் ஆப்பிரிக்காவில் வாழும் சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. அதோடு மட்டுமல்லாமல், ‘ சிவிங்கிப் புலி திட்டத்தை செயல்படுத்த தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு (National Tiger Conservation Authority (NTCA)) வழிகாட்டும் நோக்கில் 3 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் அமைத்தது.
4 குட்டிகள்:
இந்நிலையில், சியாயா என்ற பெண் சிவிங்கி புலியானது 4 குட்டிகளை ஈன்றது. பிறந்த குட்டிகள் கூண்டில் பாதுகாப்பாக வனத்துறையின் கண்காணிப்பில் உள்ளன.