Crime: தரையில் மூன்று முறை வீசி குழந்தையை அடித்த கொடூரம்.. பிரபல சீரியல் நடிகை கணவர் மீது புகார்!
மும்பையை சேர்ந்த 41 வயது சீரியல் நடிகை ஒருவர் தனது 21 வயது கணவர் மீது தனது 15 மாத மகனை தரையில் மூன்று முறை அடித்ததாக காவல்துறையில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.
மும்பையை சேர்ந்த 41 வயது சீரியல் நடிகை ஒருவர் தனது 21 வயது கணவர் மீது தனது 15 மாத மகனை தரையில் மூன்று முறை அடித்ததாக காவல்துறையில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்துள்ளார்.
தொலைக்காட்சி நடிகையான 41 வயதான சந்திரிகா சாஹா கடந்த ஞாயிற்றுக்கிழமை பங்கூர் நகர் இணைப்பு சாலையில் உள்ள காவல்நிலையத்தில் அவரது கணவர் அமன் மிஸ்ரா மீது புகார் ஒன்றை அளித்தார். அவர் அளித்த அந்த புகாரில், “ மிஸ்ரா தனது 15 மாத மகனை தரையில் மூன்று முறை அடித்தார். கடந்த வெள்ளிக்கிழமை நான் சமையலறையில் இருந்தேன். அப்போது எனது 15 மாத குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது. எனது கணவரிடம் குழந்தையை பார்த்துக்கொள்ளும் படி கூறினேன். அவரும் குழந்தையுடன் பெட் ரூம் சென்றார்.
சில நிமிடங்களுக்கு பிறகு, மீண்டும் குழந்தை மிகவும் சத்தத்துடன் அழுதது. என்னவென்று நான் பதறி அடித்து சென்று பார்த்தபோது எனது 15 மாத குழந்தை தரையில் பலத்த காயத்துடன் அடிப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்து காயம் பட்டு கிடந்த எனது மகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன்.
தொடர்ந்து சனிக்கிழமை சாஹா தனது பெட் ரூமில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளார். அப்போது அதிர்ச்சிகர சம்பவம் ஒன்றை பார்த்துள்ளார். அதில், சாஹாவின் கணவர் மிஸ்ரா தனது 15 மாத குழந்தையை பெட் ரூம் தரையில் மூன்று முறை வேகமாக அடித்துள்ளார். பின்னர், சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து , சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2015 இன் பிரிவு 75ன் கீழ் வழக்கு காவல்துறையினர் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சிசிடிவி காட்சிகளின் பதிவுகளை கொண்டு வழக்கை விசாரித்து வருகிறோம் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
எதனால் அந்த தாக்குதல்?
சாஹா மற்றும் அமன் மிஸ்ரா காதலித்து வந்ததிலிருந்து மிஸ்ரா குழந்தை பெற்றுகொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை. கடந்த 2022 ம் ஆண்டு ஏற்கனவே விவாகரத்து பெற்றவரான சாஹா, பங்கு வர்த்தகரான மிஸ்ராவை சந்தித்துள்ளார். தொடர்ந்து இந்த பழக்கம் நட்பில் தொடங்கி லிவிங் வரை சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் சாஹா கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும், கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார். ஆனால், குழந்தையின் வளர்ச்சி மற்றும் சாஹாவின் வயதை கருத்தில்கொண்டு மருத்துவர் கருக்கலைக்க மறுத்துவிட்டனர். இவரது கர்ப்பம் தொடர்பாக தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். மகனுக்கு 14 மாத குழந்தையாக இருக்கும் போது கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது இந்த விவகாரத்தில் குழந்தையை கொல்லும் அளவிற்கு அமன் மிஸ்ரா முயற்சித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.