மேலும் அறிய

Court On Impotence Plea : "ஆண்மைக்குறைவு என பொய்யாக குற்றம்சாட்டினால்..." : கர்நாடக நீதிமன்றம் வெளியிட்ட கருத்து..

இதன் அடிப்படையில், விவகாரத்து கோரி கணவர் மனு தாக்கல் செய்யலாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கணவருக்கு ஆண்மைக்குறைவு இருப்பதாக எந்த வித ஆதாரமும் இன்றி மனைவி குற்றம்சாட்டினால் அது மன ரீதியான துன்புறுத்தலுக்கு சமம் என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், விவாகரத்துக் கோரி கணவர் மனு தாக்கல் செய்யலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. 

விவகாரத்துக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தார்வாத் குடும்ப நல நீதிமன்றம் நிராகரித்த நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தார்வாத்தை சேர்ந்த நபர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுனில் தத் தலைமையிலான அமர்வு, இந்த கருத்து தெரிவித்துள்ளது.

மனைவிக்கு மறுமணம் நடைபெறும் வரை, அவருக்கு 8,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்த நீதிமன்றம், "தனது கணவர் திருமண கடமைகளை நிறைவேற்றவில்லை. பாலியல் செயல்பாடுகளில் ஈடுபட அவரால் இயலவில்லை என்றும் மனைவி குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அவர் தனது குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை.

இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கணவரின் கண்ணியத்தைக் குறைக்கும். ஒரு கற்றறிந்த பெண் தன் கணவனின் இயலாமையை பிறர் முன்னிலையில் கூறமாட்டார். கணவரின் குழந்தைகளைப் பெற இயலாமை தொடர்பான குற்றச்சாட்டு மனரீதியான துன்புறுத்தலுக்கு சமம்.

மருத்துவ பரிசோதனைக்கு தயார் என கணவர் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும், மனைவி மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தன் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டார். இந்து திருமணச் சட்டம் 1955 பிரிவு 13 இன் படி, ஆண்மையின்மை விவகாரத்திற்கு காரணமாக இருக்க முடியாது. இது தொடர்பான பொய்யான குற்றச்சாட்டுகள் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகிறது. இந்த பின்னணியில் கணவர் விவாகரத்து கோரலாம்" என தெரிவித்தது.

மனுதாரர் அந்த பெண்ணை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களில் அவர் விவாகரத்து கோரி தார்வாத் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தொடக்கத்தில் தனது மனைவி திருமண வாழ்க்கைக்கு ஒத்துழைத்ததாகவும் ஆனால் பின்னர் அவரது நடத்தையில் மாறுதல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

தன்னால் உடலுறவு கொள்ள இயலாது என மனைவி உறவினர்களிடம் பலமுறை கூறியதாகவும், இதன் காரணமாக தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் மனைவியிடம் விவகாரத்து கோரினார். இருப்பினும், தார்வாத் குடும்ப நல நீதிமன்றம் ஜூன் 17, 2015 அன்று விவாகரத்து கோரிய அவரது மனுவை நிராகரித்தது. பின்னர், கணவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்?
முக்கிய புள்ளியின் பினாமி.. தொடர்ந்து துரத்தும் ED.. யார் இந்த ரத்தீஷ்
"நான் இப்படி செய்வனோ..?" - ஜி.கே.மணி உருக்கம்
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Crime: 13 வயதில் 2 பேருடன் உறவு? 3 நாள் சிசுவாக ரோட்டில் கண்டெடுத்த பெண் - வளர்ப்பு தாயை கொன்ற சிறுமி
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Operation sindoor : ”தூக்கத்தை கெடுத்த இந்தியா பேசி தான் தீர்க்கணும்” தாக்குதலை ஒப்புக்கொண்ட பாக் பிரதமர்
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
Crime: முடிக்கு ஆசைப்பட்டு உசுரே போச்சே..! அனுஷ்கா சம்பவம் - பல் டாக்டர் பாக்குற வேலையா இது
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
காலையிலேயே கொடூரம்.. அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து! பரிதாபமாக பறிபோன 4 உயிர்கள்
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
CSK Dhoni: அவசரப்பட்ட சிஎஸ்கே ரசிகர்கள், கடுப்பான தோனி எடுத்த முடிவு - ருதுராஜ் காலி? ஏலத்தில் ஜடேஜா?
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
RCB Vs KKR: ஆர்சிபியின் பயங்கர ஃபார்ம் தொடருமா? KKR பிளே-ஆஃப் வாய்ப்பு இன்று உறுதியாகுமா? புள்ளிப்பட்டியல் நிலவரம்
Embed widget