இந்தியாவை யாராலும் மிரட்ட முடியாது... பாகிஸ்தான், சீனாவுக்கு மெசேஜ் சொன்ன மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்..!
ஆழ்வாா்பேட்டை மியூசிக் அகாடெமியில் நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், ‘உலக அரங்கில் இந்தியாவுக்கு உயரும் முக்கியத்துவம் ஏன்?’ என்ற தலைப்பில் மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் சிறப்புரை ஆற்றினார்.
சென்னையில் நேற்று நடைபெற்ற ‘துக்ளக்’ வார இதழின் 53ஆவது ஆண்டு நிறைவு விழாவில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினார்.
இந்தாண்டு, ஆழ்வாா்பேட்டை மியூசிக் அகாதெமியில் நேற்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், ‘உலக அரங்கில் இந்தியாவுக்கு உயரும் முக்கியத்துவம் ஏன்?’ என்ற தலைப்பில் மத்திய அமைச்சா் ஜெய்சங்கா் சிறப்புரை ஆற்றினார்.
உரி, பாலக்கோட் தாக்குதலை மேற்கோள் காட்டி பேசிய அவர், "இந்தியாவின் நீண்ட கால பொறுமையான அணுகுமுறை பயங்கரவாதத்தை இயல்பாக்கும் அபாயத்தை உருவாக்கியது. ஆனால், உரி, பாலக்கோட் தாக்குதல் மிகவும் அவசியமான மெசேஜ் அனுப்பியது. நமது நாட்டை யாராலும் மிரட்ட முடியாது.
தற்போதுள்ள நிலைமையை மாற்றும் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உறுதியானவை. நாம் மேற்கொண்ட ஒப்பந்தங்களை மீறி வடக்கு எல்லை பகுதியில் பெரும் படைகளை கொண்டு வந்து தற்போது உள்ள நிலையை மாற்ற சீனா இன்று முயன்று வருகிறது.
கோவிட் இருந்தபோதிலும், எங்களின் எதிர்ப்பு நடவடிக்கை வலுவாகவும் உறுதியாகவும் இருந்தது. நமது எல்லைகளில் மிகக் கடுமையான நிலப்பரப்பிலும் கடுமையான காலநிலைக்கு மத்தியிலும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்ட நாட்டை பாதுகாக்கின்றனர். அது இன்றுவரை தொடர்கிறது.
உலக நாடுகள் இந்தியாவை யாராலும் அச்சுறுத்த முடியாத ஒரு நாடாக பார்க்கிறது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய தேவையானவை மேற்கொள்ளப்படும்.
நாட்டின் நல்வாழ்வு பல அம்சங்களைக் கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு என்பது கேள்விக்கு இடமின்றி அடிப்படையான விஷயம். இந்த விஷயத்தில் அனைத்து நாடுகளும் சோதிக்கப்படுகின்றன. கிளர்ச்சியில் இருந்து எல்லை தாண்டிய பயங்கரவாதம் வரை, நம் பங்கை காட்டிலும் அதிக அளவில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம்.
இருப்பினும், எங்களின் நீண்ட பொறுமையான அணுகுமுறை பயங்கரவாதத்தை இயல்பாக்குவதற்கான ஆபத்தை உருவாக்கியது. அதனால்தான், உரியிலும் பாலகோட்டிலும் தாக்குதல் நடத்தி அவசியமான மெசேஜ் அனுப்பினோம்" என்றார்.
கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்கள் குறித்து பேசிய அவர், "இந்தியாவால் தடுப்பூசிகளை தயாரித்து உலகிற்கே வழங்க முடிந்தது. இதையெல்லாம் ஏன் வெளிவிவகார அமைச்சர் பேசுகிறார் என்று நீங்கள் நினைக்கலாம்.
எனது வெளிநாட்டுப் பயணங்களின் போது, பல வளர்ந்த நாடுகளுக்கு நாம் வழங்கிய தடுப்பூசிகள் பற்றி அவர்கள் பேசி நான் கேட்டிருக்கிறேன். இதுகுறித்த அன்பான உரையாடல் நடந்திருக்கிறது. நமது தொழில்நுட்பத்தின் மீது அவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களுக்கும் சில பிரச்சினைகள் இருப்பதாக என் சகாக்கள் என்னிடம் சொன்னார்கள்.
ஆனால், ஒரே ஒரு மோடி மட்டுமே (பிரதமர்) இருப்பதால், தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வுகளைக் காணும்படி நான் அவர்களிடம் சொன்னேன்" என்றார்.