இந்தியாவுடன் கைகோர்க்கும் சிங்கப்பூர்.. உலக நாடுகளே மிரளும் ராணுவ பயிற்சி
ஜோத்பூரில் இந்தியா - சிங்கப்பூர் கூட்டு ராணுவப் பயிற்சியின் 14-வது பதிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இந்தியா - சிங்கப்பூர் கூட்டு ராணுவப் பயிற்சியின் 14-வது பதிப்பான "போல்ட் குருக்ஷேத்ரா 2025" என்ற பயிற்சி இன்று (27 ஜூலை 2025) ஜோத்பூரில் தொடங்கி 2025 ஆகஸ்ட் 04 வரை நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் 4-வது சிங்கப்பூர் கவசப் பிரிவின் 42வது படைப்பிரிவும், இந்திய ராணுவத்தின் இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவும் பங்கேற்றுள்ளன.
இந்தியாவுடன் கைகோர்க்கும் சிங்கப்பூர்:
இந்தப் பயிற்சி, இயந்திரமயமாக்கப்பட்ட போருக்கான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்த பயிற்சியை நோக்கமாகக் கொண்ட போர் பயிற்சியாக நடத்தப்படுகிறது. இது, இந்திய ராணுவ தளவாடங்களின் கண்காட்சியுடன் நிறைவடையும்.
The 14th edition of the India–Singapore Joint Military Exercise, Exercise Bold Kurukshetra 2025, is set to commence today at Jodhpur and will continue till 04 August 2025.
— PIB India (@PIB_India) July 27, 2025
The exercise will witness the participation of the 42 Singapore Armoured Regiment of the 4 Singapore… pic.twitter.com/EGzyzI6vUr
தொடக்க விழாவில் இரு தரப்பிலிருந்தும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை பிரிவு அதிகாரி கர்னல் அர்ஜுன் கணபதி இந்திய பிரிவுக்குத் தலைமை வகித்தார். 42 சிங்கப்பூர் கவசப் படைப்பிரிவின் பட்டாலியன் கமாண்டர் லெப்டினன்ட் கர்னல் கியூ ஜி யூங் சிங்கப்பூர் அணிக்கு தலைமை வகித்தார்.
உலக நாடுகளே மிரளும் ராணுவ பயிற்சி:
போல்ட் குருக்ஷேத்ரா 2025 பயிற்சி, இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி ஒத்துழைப்பை வளர்க்கும்.
இதையும் படிக்க: Diwali Car Launch: இந்த தீபாவளி செம்ம கலெக்ஷன் மா..! காம்பேக்ட் தொடங்கி மிட்சைஸ் வரை, பட்டாசாய் புதிய SUV-க்கள்





















