மேலும் அறிய

"இதுல இந்து, முஸ்லீம்னு எதுவும் இல்ல" பட்டாசுகளுக்கு தடை.. அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்!

இந்துக்களின் பண்டிகையை குறிவைத்து பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளனர்,

மாசுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்க பட்டாசுகளுக்கு தடை விதிப்பது அவசியம் என்றும் இதில் இந்து, முஸ்லீம் கோணம் என எதுவும் இல்லை என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

"இந்துக்களை டார்கெட் செய்கின்றனர்"

டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தொடர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. 

இப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க கடந்த சில ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வரும் 2025ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் வெடிக்க முழுத் தடை விதித்து டெல்லி அரசு இந்த மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

(மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 மற்றும் ஆன்லைன் விற்பனை மற்றும் விநியோக சட்டத்தின் கீழ் இந்த உத்தரவை டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்தது. இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்:

இந்துக்களின் பண்டிகையை குறிவைத்து இப்படி செய்வதாக அவர்கள் விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள டெல்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இதில் இந்து, முஸ்லீம் என பாகுபாடு காட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய அவர், "தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்காமல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றி கொண்டாட வேண்டும்.

நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யவில்லை, நமக்கு நாமே நன்மை செய்கிறோம். ஏனென்றால், ஏற்படும் மாசுபாட்டால் இறுதியில் நாமும் நமது சிறு குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறோம் (பட்டாசுகளை வெடிப்பதன் மூலம்). இதில் இந்து-முஸ்லிம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் சுவாசமும் உயிரும் அவசியம்" என்றார்.

சுவாசு கோளாறுகள் உட்பட, ஆஸ்துமா தொடங்கி நுரையீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் தரம் டெல்லியில் மோசமாக இருக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!
Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!
Annamalai On CM Stalin: திமுககாரங்க ஸ்கூல்ல சேர்த்து விடனுமா? கருப்பு டப்பா? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Annamalai On CM Stalin: திமுககாரங்க ஸ்கூல்ல சேர்த்து விடனுமா? கருப்பு டப்பா? - முதலமைச்சருக்கு அண்ணாமலை கேள்வி
Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?
MK Stalin Decision :
MK Stalin Decision : "மத்திய - மாநில அரசு உறவு” முக்கிய முடிவை அறிவிக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
ADMK: அதிமுகவை சுத்து போடும் மத்திய, மாநில அரசுகள் - எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ., வீட்டில் ரெய்டு
Embed widget