EWS இடஒதுக்கீடு பயனாளிகளை அடையாளம் காண எந்தவித கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை...பல்டி அடித்த மத்திய அரசு...!
EWS இடஒதுக்கீடு பயனாளிகள் குறித்து நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சஜிதா அகமது கேள்வி எழுப்பியிருந்தார்.
![EWS இடஒதுக்கீடு பயனாளிகளை அடையாளம் காண எந்தவித கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை...பல்டி அடித்த மத்திய அரசு...! EWS reservation No survey done to identify number of EWS beneficiaries Centre reply EWS இடஒதுக்கீடு பயனாளிகளை அடையாளம் காண எந்தவித கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை...பல்டி அடித்த மத்திய அரசு...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/21/30280ecf9f2f5d9afe0225b33fc2a1e91671608270348224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டவர்களுக்கான (EWS) இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பயனாளிகளை கண்டறிய நிதி ஆயோக் தரவுகளை நம்பி இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பியபோது மத்திய அரசு வேறு விதமான பதிலை அளித்துள்ளது.
EWS இடஒதுக்கீடு பயனாளிகள் குறித்து நாடாளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சஜிதா அகமது கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு, மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
அதாவது, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு பயனாளிகளை கண்டறிய கண்கெடுப்பு எதவும் நடத்தப்படவில்லை என்றும் அதேபோல பயனாளிகளை கண்டறிய கணக்கெடுப்பு நடத்தும் திட்டம் எதவும் இல்லை என்றும் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, EWS இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, வாய்மொழியாக விளக்கம் அளித்த மத்திய அரசு, "EWS இடஒதுக்கீட்டுக்கு கீழ் வரும் பொது பிரிவினரின் 18.2 சதவிகிதம் பேரை அடையாளம் காண நிதி ஆயோக்கின் பல பரிமாண வறுமைக் குறியீட்டில் தொகுக்கப்பட்ட தரவுகளை நம்பி இருக்கிறோம்" என குறிப்பிட்டது.
ஆனால், நீதிபதி தினேஷ் மகேஷ்வரி எழுதிய வழக்கின் தீர்ப்பில், "பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்ற வகைப்படுத்தல் சம்பந்தப்பட்ட தரவுகள் மற்றும் காரணிகள் அடிப்படையிலேயே அமையும்.
அது யாருக்கு எல்லாம் பொருந்தும் என்பது தேவைப்படும்போது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும். இந்த விவகாரத்தில் அரசின் அதிகாரத்தை விரிவடைய செய்யும் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை கேள்வி கேட்க முடியாது" என குறிப்பிட்டது.
EWS இடஒதுக்கீட்டிற்கான வருமான அளவுகோலை கேள்விக்கு உட்படுத்திய உச்ச நீதிமன்றம், "குடும்ப ஆண்டு வருமானத்திற்கான 8 லட்சம் ரூபாய் அளவுகோலை நிர்ணயிப்பதற்கு என்ன தரவுகள் பரிசீலிக்கப்பட்டன. எந்த அடிப்படையில் 10 சதவிகிதம் பேருக்கு இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது"
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கிரீமிலேயரில் வருமான வரம்பை மத்திய அரசு நீக்கிவிட்டதா என கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், "EWS பிரிவின் கீழ் தகுதி பெற்றவர்கள் சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய நிலையில் இல்லை என்பதால் இது, நியாயமற்றதாக இருக்கும்"
கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்ச நீதிமன்றம் என தீர்ப்பு வழங்கி இருந்தது. இந்த இட ஒதுக்கீடு பாகுபாடற்றவை என்றும் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மாற்றவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)