Evening Headlines Today: திமுகவில் கு.க செல்வத்துக்கு பதவி.. மாமன்னன் கிளிம்ப்ஸ்.. ராகுல் காந்தியின் யாத்ரா.. இன்னும் பல செய்திகள்..
நாடு முழுவதும் இன்று நாள் முழுவதும் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இங்கு படிக்கலாம்.
தமிழ்நாடு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தொடங்கிய திருவிழா டிச.6ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது .
அரசமைப்பு நாள் கொண்டாட காரணம் பிரதமர் மோடி தான். அதற்கு முன் எந்த பிரதமரும் கொண்டாட நினைத்ததில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மாமன்னர் படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிட்டு நடிகர் உதயநிதிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வத்திற்கு பதவி வழங்கப்பட்டது. திமுகவின் தலைமை நிலைய அலுவலக செயலாளராக அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மெரினா கடற்கரையில் மரப்பாதையில் சென்று மாற்றுத்திறனாளிகளும் கடலின் அழகை ரசித்திட சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட பாதையை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
இந்தியா
மத்தியப் பிரதேசத்தில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொண்டர்கள் புடைசூழ ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டினார்.
சபரிமலையில் நேற்று வரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் . இன்று ஞாயிற்று கிழமை என்பதால் அதிகரித்துள்ள பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு இன்று முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விளையாட்டு
இந்தியா–நியூசிலாந்து இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. முதலில் 29 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்ட நிலையில், மழை நீடித்ததால் போட்டி ரத்தானது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் இ பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ஜப்பான் அணியை மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகா 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த ஆட்டம் அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
குரூப் எஃப் பிரிவில் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியத்தை 0-2 என்ற கோல் கணக்கில் மொராக்கோ வீழ்த்தியது.