Lalu Prasad Yadav : சிறுநீரகத்தை தானம் செய்த மகள்.. லாலு பிரசாத் இப்போ எப்படி இருக்கிறார்? வைரலாகும் வீடியோ..
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் பல நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் பல நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உடல்நலப் பிரச்னைகளால் அவதிப்பட்டு வரும் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தப்பட்டது. 74 வயதான லாலு பிரசாத் யாதவ், சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை செய்து கொள்வதற்காக சிங்கப்பூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் வசித்து வரும் லாலுவின் மகள், அவருக்கு சிறுநீரகம் அளிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். அதற்கான அறுவை சிகிச்சை செய்வதற்காக லாலு பிரசாத், சிங்கப்பூர் சென்றுள்ளார்.
அவர் வீல் சேரில் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்படும் வீடியோவை மகள் ரோகிணி ஆச்சார்யா ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் தந்தையின் காலை தொட்டு வணங்குகிறார்.
खुशी का हर लम्हा होता है पास
— Rohini Acharya (@RohiniAcharya2) November 27, 2022
पिता का साया जो होता है साथ🤞💕
हर मुसीबत से लड़ना हमें है सिखाया
गरीब,वंचित,शोषित समाज को जिन्होंने अधिकार है दिलाया🙏 pic.twitter.com/TW2xZGaZip
அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நீங்கள் உங்கள் தந்தையுடன் இருக்கும் ஒவ்வொரு கணமும் உங்களுக்கு மகிழ்ச்சிதான். இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி தகர்த்து வர வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தது எனது தந்தைதான்.
லாலு யாதவ் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். முன்னாள் ரயில்வே துறை அமைச்சரான லாலு, கால்நடை தீவன வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு, சிகிச்சைக்காக டெல்லி மற்றும் ராஞ்சியில் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, செப்டம்பர் மாதம், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கான லாலுவின் மனுவை டெல்லி நீதிமன்றம் அனுமதித்தது. சிறப்பு நீதிபதி (சிபிஐ) கீதாஞ்சலி கோயல் அக்டோபர் 10 முதல் அக்டோபர் 25 வரை, வெளிநாடு செல்ல லாலுவுக்கு அனுமதி வழங்கினார். தனது பாஸ்போர்ட்டை விடுவிக்கக் கோரிய லாலுவின் மனுவை ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 16-ஆம் தேதி ஏற்று கொண்டது.
இதற்கிடையில், லாலுவின் அரசியல் வாரிசான அவரது இளைய மகன் தேஜஸ்வி யாதவ், அவருக்கு வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்களிடமிருந்து பிறந்தநாள் பரிசாக மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
நவம்பர் 9 ஆம் தேதி, 33ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தேஜஸ்வி யாதவ், முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்ட அரசு விழாவில் தனது இந்த விருப்பத்தை தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்