மேலும் அறிய

Shopian Encounter: ஜம்மு-காஷ்மீர்: ராணுவ வீரர்கள் நடத்திய என்கவுண்டர்: பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் ஹனீஸ் என தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து காஷ்மீர் காவல் துறை தரப்பில் கூறுகையில், "சோபியான் மாவட்டம், காப்ரன் பகுதியில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக கடந்த மாதம் செய்தி வெளியானது.

காஷ்மீரின் பிரபலமான சுற்றுலா தலமான தால் ஏரியின் ஷிகாரா கூட்டமைப்பின் தலைவர் இது குறித்து கூறுகையில், "இந்த ஆண்டு காஷ்மீருக்கு கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். அடுத்த ஆண்டு நாங்கள் இன்னும் அதிகமான சுற்றுலா பயணிகள் வரலாம் என எதிர்பார்க்கிறோம். காஷ்மீரில் சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக தால் ஏரி படகு வீடுகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதில் அரசு எங்களுக்கு உதவ வேண்டும்" என்று கோரினார்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, அந்த மாநிலம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன்கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் உருவானது. 

காஷ்மீரில் சுற்றுலா:

ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா என்பது ஜம்மு-காஷ்மீர் காஷ்மீர் பள்ளத்தாக்கு, செனாப் பள்ளத்தாக்கு, சிந்து பள்ளத்தாக்கு மற்றும் லித்தர் பள்ளத்தாக்கு போன்ற பல பள்ளத்தாக்குகளை கொண்டுள்ளது. ஸ்ரீநகர், முகலாயத் தோட்டங்கள், குல்மார்க், பகல்காம், பத்னிதோப் மற்றும் ஜம்மு போன்றவை ஜம்மு-காஷ்மீரில் சில முக்கிய சுற்றுலா தலங்கள் ஆகும். ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான இந்து யாத்ரீகர்கள் வைஷ்ணவி தேவி கோயிலுக்கும் அமர்நாத்தின் பனிக்கட்டி இலிங்கத்தைத் தரிசிக்கவும் வருகை தருகின்றனர். இது மாநிலத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 
காஷ்மீர் பள்ளத்தாக்கு இந்தியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தியாவின் மிகவும் பிரபலமான மலை வாழிடங்களில் ஒன்றான குல்மார்க், உலகின் மிக உயர்ந்த பசுமையான குழிப்பந்தாட்ட மைதானமாகவும் உள்ளது. தீவிரவாத அச்சத்தால் கடந்த முப்பது ஆண்டுகளில் சுற்றுலா மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.

சுற்றுலாவை நம்பியிருக்கும் வணிகம் தொடர்புடைய மக்கள் கடும் சவால்களை எதிர்கொள்கின்றனர். மேலும் பிராந்தியத்தில் முன்னெப்போதுமில்லாத சூழ்நிலை காரணமாக எப்போதும் பெரும் இழப்பை சந்திக்கின்றனர். ஜம்மு-காஷ்மீர் அதன் அழகிய அழகு, மலர் தோட்டங்கள், ஆப்பிள் பண்ணைகள் மற்றும் பலவற்றிற்கும் பிரபலமானது. இது அதன் தனித்துவமான கைவினைப்பொருட்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற காஷ்மீரி சால்வைகளுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

Pugaar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

ஜம்மு-காஷ்மீரை சாலை வழியாகவும், விமானம் மூலம் அடையலாம். தேசிய நெடுஞ்சாலை எண் 1ஏவில் காசிகுண்டிற்கு அருகிலுள்ள பனிஹால் சாலை சுரங்கப்பாதை வழியாகவும், சிந்தான் கணவாய் மற்றும் கிஷ்துவார் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 1பி வழியாகவும் இது இந்தியாவின் பிற பகுதிகளுக்கு அணுகலைக் கொண்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget