பாகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவந்த யானை : உணர்ச்சிப்பூர்வமான வீடியோ !

தன்னை வளர்த்த பாகனுக்கு யானை ஒன்று நேரில் வந்து இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளது.

FOLLOW US: 

யானைகளுக்கும் அதை வளர்க்கும் பாகன்களுக்கும் எப்போதும் அளவுகடந்த அன்பு இருக்கும். அவை சில நேரங்கள் அந்த யானை செய்யும் செயல்களால் வெளிப்படும். அத்துடன் தன்னுடைய பாகன் இல்லாத போது அவரை தேடும் யானையின் செயலும் இதை சுட்டிக்காட்டும். அந்தவகையில் யானை ஒன்று, தன்னை வளர்த்த பாகன் மரித்த நிலையில் அவருக்கு இறுதியாக அஞ்சலி செலுத்தவந்துள்ளது. 

கேரள மாநிலத்தில் உள்ள மலை கிராமத்தில் வசிந்து வந்த பாகன் ஒருவர் திடீரென உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்திருப்பதாக தெரிகிறது. அவருடைய மறைவை தொடர்ந்து அந்தக் குடும்பம் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதே சமயம் அவர் வளர்த்த யானையும் மிகுந்த சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த யானை தன்னுடைய பாகனுக்கு இறுதி அஞ்சலி செய்யும் காட்சிகளை அதை தெளிவாக நமக்கு உணர்த்துகின்றன. யானையின் இந்தச் செயலை ஒருவர் வீடியோ எடுத்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 இந்த வீடியோ பார்ப்பவர்களை மிகவும் உணர்ச்சிவசம் அடையை வைக்கும் வகையில் உள்ளது. அதில் வெளியே வைக்கப்பட்டுள்ள தனது பாகனின் உடலை காண வந்த யானை தனது தும்பிக்கையை தூக்கி சத்தம் எழுப்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதை காணும்போது அந்த பாகனுக்கும் யானைக்கும் எந்த அளவிற்கு உறவுப்பிணைப்பு இருந்திருக்கும் என்று நம்மால் உணர முடிகிறது. விலங்குகளுக்கு 5 அறிவுதான் என்றாலும் அவை தம்மை வளர்த்தவர்களுக்கு விசுவாசமாக இருக்கும். அந்த வகையில் தன்னை வளர்த்தவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி தன்னுடைய அன்பை, இந்த யானை வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags: Kerala elephant dies Mahout Last respect Elephant Mahout Elephant Pagan Pagan

தொடர்புடைய செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

கருப்புப்பூஞ்சை மருந்தில் பாகுபாடா? - நீதிமன்றத்தில் மத்திய அரசு மறுப்பு..!

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

புதுச்சேரியில் முதன் முறையாக சபாநாயகர் நாற்காலியில் இடம்பிடித்தது பாஜக..!

புதுச்சேரியில் முதன் முறையாக சபாநாயகர் நாற்காலியில் இடம்பிடித்தது பாஜக..!

Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

Citizenship Amendment Act: போராட்டம் நடத்துவது  தீவிரவாதச் செயல் அல்ல - டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி

டாப் நியூஸ்

MK Stalin Delhi Visit Live: டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்; பிரதமருடன் சந்திப்பு!

MK Stalin Delhi Visit Live: டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்; பிரதமருடன் சந்திப்பு!

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

Tamil Nadu Coronavirus LIVE News : இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

Tamil Nadu Coronavirus LIVE News :  இன்று காலை தமிழ்நாடு வந்தடைந்த 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள்!

‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!

‛இது வேற மாதிரி சம்பவம்’ உள்நாட்டு போரை கட்டுப்படுத்திய கால்பந்து வீரர் ட்ரோக்பா!